
– டாக்டர் ஜி.ராஜமோகன்
மருத்துவ சேவையை மனம் விரும்பி ஆத்மார்த்தமாக நேசித்து செய்பவர்கள் ஒரு சிலரே. சென்னை பெசன்ட் நகரில் இயங்கி வரும் ஜெயம் பாலி கிளினிக்கை நடத்தி வரும் டாக்டர் ரமேஷ் சதாசிவன், என் மனம் கவர்ந்த மருத்துவர். சர்க்கரை நோய், இதய நோய், முதியோர் நலன் என முக்கியமான எல்லா துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
‘செவிலியர் தினத்தை’ விமரிசையாக கொண்டாட அழைத்தார். செவிலியரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினேன்.
‘‘நோயாளிகளிடம் அன்பு, தியாக உணர்வு, தன்னலம் இல்லாத சேவை, பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தல், நேரம், காலம் பார்க்காமல் உழைப்பது, நோயாளிகள் விரைவில் குணமாக மருத்துவரோடு சேர்ந்து உழைப்பது, அவசரத்தில் உதவுவது & பெண்மை, மென்மை, மேன்மை எல்லாம் உடையவர்கள் செவிலியர்கள். மருத்துவர் மருந்தை சிபாரிசு செய்வார். அந்த மருந்தை பக்குவமாக நோயாளிகள் எடுத்துக் கொள்ள உதவி செய்து அவர்கள் நலம் பெற உதவுபவர்கள் செவிலியர்கள். அவர்களை மனப்பூர்வமாக வாழ்த்துவோம்.. பாராட்டுவோம்.

