
நீண்ட காலமாக மனிதனின் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் அற்புதப் பழமாக ஆப்பிளே முதலிடத்தில் இருந்தது. ஆனால், இப்போது மாதுளம்பழம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மாதுளையில் உள்ள புனிகாலஜின்ஸ் என்ற பொருள் சக்தி வாய்ந்த ஆன்ட்டிஆக்ஸிடென்ட் போலச் செயல்பட்டு இதயத்தை மிகவும் ஆரோக்கியமாகப் பாதுகாத்து வருகிறது. இதனால் ஒருவர் எத்தகைய கொடிய நோயினால் அவதிப்பட்டாலும் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வது நிரூபிக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட தகவலாக 2013ல் அதிகாரபூர்வமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சத்துணவு ஆராய்ச்சி நிபுணர்கள் அறிவித்தனர்.
எல்லாஜிக் அமிலம் அதிகமாக உள்ள முதல் பழம், மாதுளைதான். இதனால் பெருங்குடலில் புற்றுநோய் பரவுவதை உடனடியாக தடுத்துவிடலாம். பழங்களிலேயே மிக விரைவாக ஜீரணிப்பது இப்பழச்சாறுதான். இரவில் மாதுளை முத்துக்களை சாப்பிட்டதும் பலருக்கும் உடனடியாக தூக்கம் வந்துவிடும். காரணம், இப்பழத்தில் உள்ள இரும்புச்சத்தை உடல் நன்கு உறிஞ்சிக் கொள்ள இதில் உள்ள வைட்டமின் சி-யே உதவுவதால் உடனடியாக நரம்பு மண்டலமும் அமைதியாகித் தூக்கம் வந்து விடுகிறது. எனவே, புற்றுநோயாளிகளும், இதயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களும் தினமும் சாப்பிடலாம்.
தாகத்தை தணிக்கும்
களைப்பை போக்கி தாகத்தை தணிக்கும் பழமாக மாதுளை திகழ்கிறது. உடலைப் போலவே உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியையும், இனிமையான உணர்வையும் தரவல்லது மாதுளம்பழம். உள்ளத்தில் பெருகும் வெறுப்பு, பகைமை போன்ற தீய குணங்களையும் நம்மிடமிருந்து வெளியேற்றி விடும். வெறுப்பை வெளியேற்ற போதுமான அளவில் மக்னீசியம் உப்பு இதில் உள்ளது. சிலருக்க காய்ச்சல் நேரத்தில் மிகவும் தாகமாக இருந்தால், அப்போது மாதுளம் பழச்சாறு அருந்தினால் உடனே தாகம் தணியும். பசியும் எடுக்கும்.
நெஞ்செரிச்சல், களைப்பு முதலியன அகலும். விந்துவைக் கெட்டிப்படுத்தும். உடலில் வெப்பம் நீங்கி குளிர்ச்சி உண்டாக்கும். மாதுளம் பழத்தின் விதை விந்துவைக் கெட்டிப்படுத்துவதுடன் உடலுக்கு ஊட்டமும் தரும். எனவே முத்துக்களாக சாப்பிட்டாலும் சரி, சாறாக அருந்தினாலும் சரி, விதையையும் சேர்த்தே சாப்பிட வேண்டும்.
மாதுளம் பழத்தோலை நன்கு உலர்த்திப் பொடியாக்கி அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளவும். இதில் பல் சுத்தம் செய்தால், பல் ஈறுகள் பலமாகும். பல்வலி இருந்தால் அதுவும் குணமாகும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் மாதுளம் பழச்சாறுடன் இரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்துவதே சிறந்தது. மற்றவர்கள் தினமும் ஆரோக்கிய பானமாக 100 மில்லி வீதம் இப்பழச்சாற்றை அருந்தி வரலாம். இதனால் கல்லீரல், இதயம், சிறுநீரகம் சிறப்பாக வேலை செய்யும். இது உடனே ரத்தத்தில் கலப்பதால் நோயாளிகள் துன்பம் குறைந்து விரைந்து குணம் பெறுவார்கள்.
வயிற்று வலி, சளி, கோழை, குடல் கோளாறு, அஜீரணக் கோளாறு, வயிற்று மந்தம் முதலியவற்றுக்கும் மாதுளம் பழச்சாறு கைகண்ட மருந்தாகும்.
மூன்று நோய்களை வெல்லலாம்
மாதுளை வாழ்நாளை எளிதில் தள்ளிப்போட உதவும். எப்படி தெரியுமா? 50 வயதிற்குப் பிறகே இதயநோய், புற்று, எலும்பு மெலிவு நோய் முதலியன கஷ்டப்படுத்த ஆரம்பிக்கின்றன. எனவே, நாற்பது வயதில் இருந்தாவது தினமும் மாதுளம் பழச்சாறு இரண்டு வேளை அருந்தி வரவும். இதன் மூலம் மூன்று நோய்களையும் வென்று நீண்ட நாட்கள் வாழலாம். இதில் உள்ள வைட்டமின் சி-யே இந்த நன்மைகளைத் தருகிறது. மாதுளை கிடைக்காத காலத்தில் எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை இவற்றுள் ஏதேனும் ஒன்றை பழச்சாறாக சாப்பிட்டு வந்தால் வைட்டமின் சி கிடைத்துவிடும்.
பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் இதயநோயோ பிற நோய்களோ வராது. மாதுளை போன்ற வைட்டமின் சி உள்ள பழங்களால் பல் ஈறு நோய்கள் முழுவதும் குணமாக்கப்படுகின்றன. மேலும், இப்பழத்தில் உள்ள பாலிபெனால்ஸ், புனிகாலஜின்ஸ் போன்றவை சக்தி வாய்ந்த ஆன்ட்டிஆக்ஸிடென்ட் போலவே செயல்படுவதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு என்ற மாரடைப்பை ஏற்படுத்தும் வில்லன் தோன்ற மாட்டான்.
பழத்தில் உள்ள வைட்டமின் பி1 நாம் சாப்பிடும் உணவுகளை சக்தியாக வெளியிட உதவுகிறது. வைட்டமின் பி3, மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதுடன், நம் ஞாபக சக்தி குறையாமல் பாதுகாத்து வருகிறது. பழத்தில் உள்ள பயோட்டின் என்ற பி குரூப் வைட்டமின் சிட்ருலின் என்ற பொருளை உருவாக்கி ரத்தத்தில் கலப்பதால் ஆண்மைக் குறைவு அகல்கிறது.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித் தருவதால், மாதுளம்பழத்தை ‘சூப்பர் ஃபுரூட்ஸ்’ என்று அழைக்கிறோம்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் கொழுப்பைக்கட்டுக்குள் கொண்டு வர நினைப்பவர்களுக்கும், இந்தப்பழம் ஒரு வரப்பிரசாதம். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
இதில் உள்ள கிரானடின்பி உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைப்பதோடு,திசுக்கள்பாதிக்கப்படுவதைத்தடுப்பதால், தோலில்சுருக்கம், கரு வளையம் போன்ற சரும பிரச்னைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
கொலஸ்ட்ரால் கொஞ்சமும் இல்லாத பழம் இது. 100 கிராம்மாதுளை 83 கலோரியைத்தருகிறது. 4 கிராம் நார்ச்சத்து இதில் இருப்பதால், நல்ல செரிமானத்துக்கும், செரிமான மண்டல இயக்கத்துக்கும் மிகவும் நல்லது.
இதில் ஃபோலிக் அமிலம் பிகாம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். உயர்ரத்த அழுத்தம், உடல்பருமன், வயிற்றுப்போக்கு, நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது.
நீண்ட ஆயுளுக்கு மாதுளை உற்ற தோழன் என்பதால் மாதுளையின் துணையுடன் நம் வாழ்நாளை நீட்டிப்போம்.

