
பெண்கள் பிரா போன்ற உள்ளாடைகள் அணிவது பிறரை கவர்வதற்கோ கவர்ச்சிக்காகவோ அல்ல. மிடுக்கான தோற்றம் தருவதோடு முதுகுவலியையும் தடுக்கும்.
போஸ்ச்சர் முதல் முதுகுவலி வரை!
பிரா அணியும்போது மார்பகங்களுக்கு ஒரு சப்போர்ட் கிடைக்கும். இதனால் மார்பகங்களில் வலி ஏற்படுவது தவிர்க்கப்படும். குறிப்பாக பாலூட்டும் காலத்தில் இந்த சப்போர்ட் மார்பகங்களுக்கு மிகவும் அவசியம். பாலூட்டும் காலத்தில் பிரா அணியத் தேவையில்லை என்பது தவறான நம்பிக்கை.
பிராவை மிகச் சரியாகப் பொருந்தும் அளவில் அணியும்போது, நிற்கும் நிலை (Posture) மேம்படும்.
பிரா, மார்பகங்களுக்குத் தேவையான சப்போர்ட் கொடுப்பதால் முதுகு வலி ஏற்படாது.
அதிக இறுக்கமாகவோ அதிக தளர்வாகவோ பிரா அணியக் கூடாது. பிராவை மீறி தசை வெளியே தெரியாமல் இருக்கும்படி அமைய வேண்டும். பிராவின் பட்டை அழுத்தி உடலில் தடம் விழக் கூடாது. இவைதான் சரியான பிரா அணிந்திருப்பதை அளவிடும் அளவுகோல்.

