பெறுவதில் பெரியது குழந்தைச் செல்வம். செல்வம் சிலரை பாழாக்கும். சிலரை செழிப்படையச் செய்யும். தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை செய்தவன் வினையின் பலனை அனுபவிப்பான். எனவே முதுமையில் நம்மை குழந்தைகள் கவனிக்கவில்லை என்பதும் முதியோர் இல்லங்களில் தள்ளிவிடுகிறார்கள் என்பதும் நம் தலைவிதி மட்டுமல்ல. நாம் செய்த வளர்ப்புமுறை. போதிய அன்பும், பாதுகாப்பும், அரவணைப்பும் இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இவ்வாறு பாசமும் நேசமும் இல்லாமல் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பாசத்துடன் கூடிய கண்டிப்பு மிக அவசியம். கண்காணிப்பற்ற முறையில் அதிக செல்லம் கொடுக்கப்பட்டு வளர்ந்த குழந்தைகள் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிப்பவர்களாக இருக்கின்றனர். குழந்தைக்கு விலை உயர்ந்த செல்போனையும், டெபிட் கார்டையும் கொடுத்துவிட்டு கணவனும் மனைவியும் (பெற்றோர்) தங்கள் இஷ்டத்திற்கு களிப்பில் ஈடுபடுவதைக் காணும்போதும் இதயம் படபடக்கிறது.
ஏழைப் பெண்குழந்தைகள் ஆசை காட்டப்பட்டு தகாத செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதனை வீடியோ எடுத்து விற்பனை செய்கிறார்கள். பணக்கார பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் போதைக்கு அடிமையாகி வசதியான பையன்களோடு உறவு வைத்துக் கொண்டு, அதனை வீடியோவில் பதிவு செய்து, பின்பு அந்தப் பையன்களை மிரட்டிப் பணம் பறிக்கின்றனர். தமிழர் கலாச்சாரம், பண்பாடு என்று கூறுவதெல்லாம் மலை ஏறிவிட்டது. செல்வம் படைத்தவர்கள் கும்மாளமிடுவதைப் பார்க்கும் வசதியற்ற இளைஞர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு, பணக்கார இளைஞர்கள் போல் அனுபவிக்க முயல்கின்றனர். அடிப்படைக் காரணம் பெற்றோர்களின் தவறான வளர்ப்பு முறைதான்.
அன்புடன்
ஜி.ராஜமோகன்
Mobile : 9840194489

