
கோடைகாலத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாவிட்டால் பலருக்கும் தூக்கம் வராது.அதற்காக எப்போதும் ஏ.சி.யிலேயே இருக்கலாமா?
வசதிபடைத்த பலர் அவர்கள் புழங்கும் இடம் அனைத்திலும் ஏ.சி.வசதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். வீட்டில் ஏ.சி., காரில் ஏ.சி.,அலுவலகம் சென்றால் அங்கும் ஏ.சி., ஷாப்பிங் சென்றாலும் ஏ.சி.தான்! இப்படி எல்லா இடங்களிலும் 24 மணி நேரமும் ஏ.சி.யில் இருந்தால் உடலில் சூரிய வெளிச்சம்படுவதில்லை.இதனால் எலும்புகள் பலமின்றி பாதிப்படையும். தினமும் சிறிது நேரமாவது உடலில் வெயில்படும்படி நடக்க வேண்டும்.அதுமட்டுமின்றி டாக்டர் ஆலோசனைப்படி வைட்டமின்-டி மற்றும் கால்சியம் மாத்திரைகளும் சாப்பிட்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இளம் வயதிலே எலும்புகள் பலம் குன்றிப்போகும்.
-டாக்டர் பி.ராதாகிருஷ்ணன், MBBS.,M.S.(ortho)

