
பேராசிரியை
டாக்டர் .உஷாரவி B.N.Y.S., M.D(ACU)., Phd (ACU) கடலூர்.
ஒளி நிரம்பிய இந்த உலகம் வலிகளால் நிரம்பியது. எத்தனை எத்தனை வலிகள் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன. வலிகள் பொம்மலாட்டக்காரனைப் போல இருக்கிறது. வலிகளின் இயக்கத்தில் பொம்மைகள் போல துடித்துக்கொண்டிருக்கிறோம்.
அம்மாவை பயத்தில் இருக்கிப்பிடித்தபடி சின்னஞ்சிறு குழந்தையாய் நான்; முதல் வலி ஊசி மூலம் எனக்குள் இறங்கியது .என் அம்மா உடனிருந்ததால் அந்த வலியை இனிய வலியாகவே இப்போதும் நான். உணர்கிறேன்.
தொடர்ந்து ஒவ்வொரு வலியாக உணரத்தொடங்கி பெரும்பாலும் 40 வயதுகள் கடத்த நிலையில் மனிதர்களை வேட்டை நாய்களை போல வலிகள் துரத்திக்கொண்டிருக்கின்றன .அவற்றிற்கு பயந்து மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் தஞ்சம் அடைந்து விலை மதிப்பில்லாத நேரத்தையும் பணத்தையும் மனவலியோடு செலவு செய்து கொண்டிருப்பவர்களையும் நாள் கண் எதிரே பார்த்துக் கொண்டிருக்கிறேன். மக்கள் வலிகளை சந்திக்க அஞ்சுகிறார்கள். ஆனால் அவர்கள் வலியிடமிருந்து தப்பிப்பதே இல்லை.
இளைஞர் விவேகானந்தரை நாய் ஒன்று துரத்தியது. பயத்தில் ஓடினார். ஓடிக்கொண்டிருக்கும் போதே தன்னை கவனித்தார் .ஏன் ஓடுகிறோம் என்ற கேள்வி அவரை நிற்க வைத்தது; நின்றார். உறுதியோடு ஒளி படைத்த கண்களோடு தீர்க்கமாக நாயை திரும்பிப் பார்த்தார். நாய் பயந்தோடியது. வலிகளை நாய்களோடு ஒப்பிடுவது சரியாக இருக்கும் என கருதுகிறேன். வலி நம் உடலுக்கு வந்திருக்கும் கேட்டை முன் கூட்டியே ஒரு தோழனைப்போல எடுத்துச் சொல்கிறது.நாம்தான் அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.அலட்சியமாக இருக்கக்கூடாது.
வலிகள் அனைத்திற்கும் ஆயுர்வேதிக் ,சித்தா, ஹோமியோபதி, யுனானி போன்ற மாற்றுமுறை மருத்துவங்களும் மருந்தே இல்லாமல் அக்குபஞ்சர், யோகா போன்ற இயற்கை மருத்துவங்களுமே வலியின் வழியினை திறக்கும் நல்ல சாவிகளாக உள்ளன!
வலி என்றால் என்ன?
முழங்கால் வலி, மூட்டு வலி, தசைபிடிப்பு வலி, தலைவலி, பல்வலி, வயிற்று வலி முதுகுவலி, இடுப்பு வலி, கை கால்வலி, தொடை வலி, நரம்பு வலி, எலும்பு முறிவு வலி, மூட்டு எலும்பு தேய்மானம், முடக்கு வாத நோய் வலி. கழுத்து வலி, முதுகு தண்டுவட நோய்கள், கீல்வாத நோய் வலிகள், மன அழுத்தத்தால் வரக்கூடிய தலைவலி, இப்படி எண்ணற்ற வலிகளை நினைக்கும் போது மனது வலிக்கிறது.
இதற்கு பயந்து வலிகளை சந்திக்காமல் போனால் வலிகள் பூதாகரமாகி தம் அனைத்து வழிகளிலும் நம்மை வழி மறித்து நிற்கும். பெரும்பாலான வலிகளுக்கு அக்குபஞ்சர் அருமையான சிகிச்சை முறையாகும். பெரும்பாலும் உள்ள அனைத்து விதமான வியாதிகளுக்கும் வலிகளுக்கும் அக்குபஞ்சர் மூலமே நல்ல நிலாரணத்தை அளிக்கிறோம்.
முழங்கால் வலி:
60 ஐ கடந்தவர்களுக்கு இந்த வலி ஒரு சாபம். இந்த வலியிலிருந்து விடுதலை பெற 30 நிமிடங்களுக்கு குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை சொல்லித் தருகிறோம். அக்குபஞ்சரில் தூண்டுதல் புள்ளி மற்றும் மசாஜ் முறைகளை நாங்கள் தீவிரமாக பரித்துரைக்கின்றோம். இம்முறை வலிகளின் குறைப்புக்கு வழிவகுக்கும்.
குளிரூட்டல் என்பது ஒரு இயற்கையான வலி நிவாரண முறையாகும். வலி மற்றும் வீக்கமுள்ள பகுதியை பெதுவாக குளிர்விப்பதன் மூலம் வலியைக் குறைக்கலாம். வலி மிகவும் கடுமையாக இருக்கும்போது குளிரூட்டல் பரித்துரைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அமைதி அடைந்தவுடன் வெப்ப சிகிச்சை பறிந்துரைக்கப்படுகிறது. எனவே குளிரூட்டல் மற்றும் வெப்பமாக்கள் இரண்டுமே கிடைப்பது நல்லது.
தசைவலி
தசைகள் மற்றும் மூட்டுகளில் உள்ள செயவிழப்புகளை குறிவைத்து சிகிச்சையளிக்கும் முறை . வலி ஏற்படுவதைக் குறைக்கிறது. வலி அதிகரிக்கும் போது பிரச்சினையின் காரணத்தை களைவது அவசியம். சில தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிக கமை ஏற்பட்டு அது வலிகளுக்கு வழிவருக்கும்.
கணைய அழற்சியால் ஏற்படும் வயிற்று வலி (செரிமான பிரச்சனை, அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம்,ஸ்டீராய்டு மருந்துகளில் பக்கவிளைவுகள் இன்னும் பல) பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு கொடுமையாக இருக்கும்.
இந்த வலிக்கான தீர்வுகள் இயற்கை மருத்துவத்தில் பல உள்ளன.
நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு இதுபோன்ற கணைய அழற்சி ஏற்பட்டால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .அது கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவின் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த வலியை போக்க நாங்கள் ஸ்டோன்தெரபி முறையை பயன்படுத்துகிறோம். இம்முறையை பயன்படுத்தி வலியில் இருந்து தற்காலிகமான நிவாரணம் பெறலாம். இதை தொடர்ந்து அக்குபஞ்சர் உள்ளிட்ட சில மருத்துவ முறைகளை பயன்படுத்தும் போது நிரந்தர நிவாரணம் கிடைத்திருக்கின்றன. இதை செய்வதற்கான வழிமுறை என்னவென்றால், தண்ணீரை சூடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஹீட்டிங் பேட் எனப்படுபடும் ஒத்தடம் கொடுக்க உபயோகிக்க கூடிய ஒரு பொருளின் மூலம் வலி இருக்கும் இடத்தில் மெதுவாக வைத்து 5 முதல் 10 நிமிடம் வரை ஒத்தடம் கொடுக் வேண்டும். பிறகு சுடுநீரில் குளித்து விட வேண்டும். இது உடனடியாக ஓர் நிவாரணத்தை தற்காலிகமாக தரவல்லது.
நரம்பு வலி
நரம்பை சுண்டி இழுப்பதை போல நரம்புகளில் வலி ஏற்படும். முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும் .பயப்பட வேண்டாம். இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த இழுப்பு ஏற்படுகிறது. இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது, குளிர்காலமும், மலச்சிக்கலும் இந்த வலிகளை தூண்டிவிடுகின்றன. இவற்றையும் குறிப்பிட்ட அக்குபுள்ளிகளை தூண்டி சரி செய்ய முடியும்.
எலும்பு தசை வலி
எலும்புகளில் ஏறு மாறான பிதுக்கங்கள் கடுமையான வலி மற்றும் வீக்கங்களை உருவாக்கலாம். சர்க்கரை வியாதியால் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் வலிகள் ஏற்படும். விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இது நல்ல பலனை தரும். மேலும் பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட வலியுள்ள இடங்களில் தடவலாம். புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரித்து அதனை தடவி வரலாம்.
சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜை அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவேண்டும். இது குறித்த மசாஜ் பயிற்சியை சிறந்த நிபுணர்கள் மூலமாக நாங்கள் அளித்து வருகிறோம்.
ஒவ்வொரு நோய்க்கும் ஏற்ற தைலத்தைத் தேர்வுசெய்து சிகிச்சை அளித்து வலிகளிலிருந்து விடுபடச் செய்கிறோய் வலியற்ற வாழ்வுதாள் வசந்தகாலம். இனி எப்படிப்பட்ட வலியாக இருந்தாலும் அவற்றை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள், கவனியுங்கள். ஆயுர்வேதிக் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் நிரந்தர தீர்வுகள் உள்ளன .வலிகளை சத்திக்கப்பழகினால் வலி உங்களை நெருங்க அஞ்சும்.
மேலும் விவரங்களுக்கு
” தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர் வேதிக் கிளிளிக்”
எண்: 11, பாரதிதாசன் தெரு.
பிள்ளையார் கோயில் எதிரில்,
மஞ்சக்குப்பம்,
கடலூர் 607 001.
செல் 93676 22256

