
-டாக்டர்.பி.அருண்
சமீபகாலமாக உணவகங்களில் கும்பல் கும்பலாக சாப்பிடும் மோகம் அதிகரித்துவிட்டது.அதுவும் அசைவ உணவு சாப்பிடுவதில் வெறித்தனமாக இருக்கிறார்கள்.உணவகங்கள் தரமான உணவுகளை வழங்குவதை உறுதி செய்ய முடியுமா?
பெரும்பாலான உணவகங்கள் குளிர்சாதனங்களை பயன்படுத்தி சமைத்த சமைக்காத கறி மீனை பாதுகாக்கிறார்கள்.கெட்டுப்போகாமல் பாதுகாப்பதில் அக்கறை இல்லாததால் சமீபத்தில் சிலர் மரணமடைந்தார்கள்.
சைவ உணவைவிட அசைவ உணவைப் பதனப்படுத்தி சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். கெட்டுப்போன அசைவ உணவில் கிருமிகள் மறைந்திருந்து, உடல் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். வீட்டுக்கு அருகே வாழும் கோழியையோ ஆட்டையோ அப்போதைக்குப் பிடித்து, யாரும் இன்றைக்கு அசைவ உணவைத் தயாரிப்பதில்லை.
மாறாக அதிக அறிமுகம் இல்லாத உணவகங்களில் சுவைத்துச் சாப்பிடும் இறைச்சி உணவு, எப்போது சமைக்கப்பட்டது என்பதிலும் நம்பகத்தன்மை இருப்பதில்லை. கெட்டுப்போன உணவின் மூலம் பூஞ்சைகளையும் பாக்டீரியாவையும் இலவசமாக நம் உடலுக்குள் நுழைய அனுமதிக்கும்போது, உடனடியாகவோ சில நாட்கள் கழித்தோ விபரீத பாதிப்புகள் உண்டாகலாம்.
சுகாதார துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களும் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.
-டாக்டர்.பி.அருண்

