–  வி.முகுந்தன் 
கண் பரிசோதனை நிபுணர் (Optometrist)
 
டல் எனும் வீட்டில் ஜன்னல்களாக அமைந்து உலகை பார்க்க உதவுபவை நமது கண்கள்.இளம் வயதில் எந்தவித இடையூறும் இல்லாமல் உலகை ரசிப்போம்; கொண்டாடுவோம்; புத்தகம் படிப்போம்;எழுதுவோம். வயது கூடும் போது பார்வையில் குறைபாடு வருவது இயல்புதான். அப்போது பார்வையை சீர் செய்ய கண் கண்ணாடி பயன்படுத்த தொடங்க வேண்டும்.
 
 கண்ணாடியை போகிற போக்கில் ஏதோ ஒன்று வாங்கினால் பரவாயில்லை என்று அலட்சியமாக செயல்பட முடியாது; செயல்படவும்கூடாது.  கண்ணாடி வாங்கும்போது முதலில் பிரேமை தேர்வு செய்ய வேண்டும்.ஷெல் பிரேம்,மெட்டல் பிரேம்,சுப்ரா பிரேம், ரிம்லெஸ் பிரேம் என பல வகைகள் உள்ளன.சிறார்களுக்கு 42,44,46;பெண்களுக்கு 46,48,50;ஆண்ளுக்கு 48,50,52,54 ஆகிய அளவுகளில் பிரேம்கள் கிடைக்கின்றன.
பொருத்தமான அளவு மிகமிக முக்கியம். பிரேமின் மேல் விளிம்பு புருவத்துடன் ஒன்று மாறும்,கீழ் விளிம்பு கன்னத்தில் உராய்வு தராத வகையில், அடிக்கடி நழுவி கீழே விழாத படியும்,அதே நேரத்தில் மிக இறுக்கமாக இல்லாத வாரும் சற்றே தளர்வாக இருக்குமாறு கவனித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
பல்வேறு வகைகள் கிடைப்பதால் விலையிலும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் உண்டு.மலிவாகவும் இல்லாமல் விலை அதிகமாகவும் இல்லாமல் அவரவர் பொருளாதார நிலைக்கேற்றவாறு வாங்க வேண்டும்.
 
கண்ணாடி தேர்வு செய்யும் போது தூர பார்வைக்கு மட்டும், கிட்ட பார்வைக்கு மட்டும், வெள்ளெழுத்துக்கு மட்டும் பயன்படுத்தும் கண்ணாடிகளை, ஒற்றை குவிய கண்ணாடிகளை(சிங்கிள் விஷன்) தங்கள் பயன்பாட்டிற்கு தேவையான பூச்சு (கோட்டிங்)HC,HMC, Blue cut போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம் மேலும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு பெறக்கூடிய கூலிங் வகைகளிலும் தேர்வு செய்யலாம்.
 
பன்குவிய கண்ணாடி(Progressive) வகைகள் பல்வேறு வகைகளில்… விலைகளில் கிடைக்கிறது. அவரவர் தமது உதாரணமாக பயன்பாட்டிற்கு எது தேவை என ஆராய்ந்து தேர்வு செய்வது நல்லது.
 
உதாரணமாக என்ன பவர்? (செய்யும் வேலையின் தன்மையை கண்ணாடி தேர்வின்போது சொல்ல வேண்டும்)என்ன வேலை செய்கிறார்? எந்த விலையில்?எது பிடித்துள்ளது என்பதை ஒப்பிட்டு பார்த்து தனக்கு தேவையானதை தேர்வு செய்ய வேண்டும்.
 
கண்ணாடி வாங்கி அணிவதற்கு முன்:
 
 1.தகுந்த திறன்(Power) பொருத்தப்பட்டுள்ளதா ?
2.தன் முகத்திற்கு காது மற்றும் மூக்கு பகுதியில் சரியாகப் பொருந்துகிறதா? தேவையெனில் சரி செய்து கொண்டு வாங்க வேண்டும்.
3. பராமரிக்கும் குறிப்புகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
 
கண்ணாடி வாங்கி பயன்படுத்தும் போது:
 
1.தகுந்த துணி மற்றும் திசுத்தாள் வைத்து துடைக்க வேண்டும்.
 
2. கண்ணாடியை பயன்படுத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கண்ணாடி பெட்டியில் தான் வைக்க வேண்டும். 
 
3.போதிய இடைவெளியில் பழுது பராமரிப்பு சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
4. உரிய காலத்தில் மறுபரிசோதனை செய்து கொள்வதும் முக்கியம் .
தகவல் தொடர்புக்கு: சென்னை, 9384051009