
டாக்டர் சி.ஏ.ரவி, டாக்டர் உஷா ரவி, தி சுசான்லி மருத்துவ குழுமம்.
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் மனிதர்கள் சந்திக்கும் உடல் நலப் பிரச்னைகள் ஏராளம்.
நிம்மதியாக தூங்கக் கூட முடியாமல் அவதிப்படுகிறார்கள். உலக மக்கள் தொகையில் சுமார் 10%-30% பேர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்.
இதனை உணர்ந்தே உலக நாடுகள் பலவும், தூக்கமின்மை பிரச்சனைகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.
தூக்கம் என்பது இயற்கையின் அற்புதமான வரம். தூக்கத்தில் நம் உடல் ஓய்வு கொள்கிறது. களைப்பிலிருந்து விடுபட்டு தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. நம் துயரங்களையும், கவலைகளையும் மறக்கடிக்கிறது. நினைத்தவுடன் தூங்கக்கூடியவர்கள் அதிஷ்டசாலிகள். துக்கத்திலிருந்து விடுபடுவதற்கு தூக்கம் மிகச்சிறந்த நிவாரணி.
தூக்கம் ஒரு அழகமான கவிதை. அதனை கொடுத்த இறைவன் தூக்கத்திற்காகவே இரவை அமைத்து தந்திருக்கிறான்.அது நம்மை மென்மையாக தழுவிக்கொள்கிறது.
தூக்கத்திற்குப் பிறகு மனம் தெளிந்த நீரோடை போல அமைதியில் திளைப்பதையும், புத்துணர்வோடு இருப்பதையும் நாம் உணரலாம்.
போதுமான, நிம்மதியான தூக்கம் மனிதனின் உடல் நலன்,மன நலன்களை பாதுகாக்கிறது.சமூக வாழ்க்கையை அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் நகர்த்திச் செல்கிறது.
தூக்கம் இல்லை என்றால்…?
தூக்கம் இல்லை என்றால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகிறது.
உடல் இயக்கத்தோடு ஒத்துழைக்க முடியாமல் உடல் செல்கள் தளர்ந்து போகின்றன.நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.
மன அழுத்தம், மனச்சோர்வு,மன நிலை பாதிப்பு, நினைவாற்றல் மற்றும் கவனக் குறைவு,பதற்றம், ஊக்கமின்மை ஏற்படுகிறது. உற்பத்தித் திறன் குறைகிறது.
தூக்கமின்மை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நோய்களை உருவாக்கலாம். தூக்கம் மனிதனிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டால்… ஒட்டுமொத்தமாக அவனிடமிருந்து அனைத்துமே பறிக்கப்பட்டுவிடும். ஒவ்வொரு இரவுகளும் தூங்கா இரவுகளாக,துயர் இரவுகளாக மாறி நம்மை விழுங்கிவிடும். சுமைகளைச் சுமக்க முடியாமல் அவன் வீழ்ந்துவிடுவான். மனப்பிறழ்வு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவிடும்.
எனவே ஒவ்வொருவரும் போதுமான தூக்கத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.இதன் மூலமே ஆரோக்கிய வாழ்வை சாத்தியப்படுத்த முடியும்.பல்வேறு நோய்களின் முதற்படியே தூக்கமின்மைதான்.
காரணங்கள்
நாள்பட்ட வலி, புற்றுநோய்,நரம்பு மண்டல பாதிப்புகள், நீரிழிவு,இதய நோய், ஆஸ்துமா,அஜீரணம், தைராய்டு பிரச்னைகள், பார்கின்சன் மற்றும் அல்சைமர் நோய்கள், காசநோய் போன்ற பல நோய்களும் தூக்கமின்மையை ஏற்படுத்துகின்றன.
ஸ்லீப் அப்னியா (தூக்கத்தில் மூச்சுத்திணறுதல்) மற்றும் “ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம்” (கால்களை நகர்த்தும் எண்ணம்) போன்ற கோளாறுகள் தூக்கம் வராமல் செய்கின்றன.
வயது அதிகரிக்க அதிகரிக்க, தூக்கமின்மை ஏற்படுகிறது.
ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் பாதிப்புகள்,மன நலன் பாதிப்புகள், கடன் தொல்லைகள், உறவினர் நண்பர்களால் பிரச்னைகள்,குடும்ப வாழ்வில் தோல்வி, பணியிட பாதிப்புகள், அன்பானவர்களின் இழப்புகள்,சில மருந்துகளின் பின் விளைவுகள்,விபத்து பாதிப்புகள், இவற்றோடு காஃபின்,நிகோடின், புகைப் பழக்கம்,மது அருந்துதல், செல்போன்,டி.வி, மின்னணு சதானங்களுக்கு அடிமையாதல் போன்றவைகளும் தூக்கமின்மை பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
இயற்கையாக தூங்க முடியாதவர்கள்,தூக்க மாத்திரைகளின் வழி தூங்க முயற்சிக்கிறார்கள்.
இது அவசர உதவியாக இருக்கலாம்.தொர்ந்து நீண்ட காலம் எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
ஆழ்ந்த தூக்கம் தரும் ஆயுர்வேதம்
தூக்கமின்மைக்கு ஆயுர்வேதம் பல தீர்வுகளை வழங்குகிறது.இதில் ஷிரோதாரா போன்ற சிகிச்சைகள், அஸ்வகந்தா,பிராமி, ஜடாமன்சி போன்ற மூலிகைகள், தியானம், பிராணாயாமம், மற்றும் எண்ணெய் மசாஜ் ஆகியவை அடங்கும்.
எங்களின் தி சுசான்லி குரூப்ஸ் நிறுவனங்களில் ஒன்றான வீ ஹெர்பல் கேர் நிறுவனம் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கின்றது. சுமார் 400 மருந்துகளை மிகச் சிறந்த முறையில் தயாரிக்கும் தனித் திறமையுடன் உள்ளோம்.
மாநில அரசின் மருந்து தயாரிப்பு சான்றிதழுடன் மத்திய அரசின் K&VIC உதவி மற்றும் சான்றிதழுடன் VITHRA (வித்ரா) – என்ற பெயரில் மனதை அமைதிப்படுத்தி நிலையான தூக்கத்தை தரும் விதத்தில் கேப்சூலை தயாரித்துள்ளோம். இது பெரியளவில் பக்க விளைவுகள் இல்லாத ஓர் தீர்வு.
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா?
*அஸ்வகந்தா உட்கொள்வது,மன அழுத்தத்தைக் குறைத்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
*பிராமி மன அமைதியைத் தந்து, பதட்டத்தைக் குறைத்து தூக்கத்தை தருகிறது.
*சூடான பாலில் சிறிது ஜாதிக்காய் சேர்த்து இரவில் குடிப்பது தூக்கத்தை வரவழைக்கும்.
*இரவில் இலகுவான,எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
*நெற்றியில் வெதுவெதுப்பான ஷிரோதாரா மூலிகை எண்ணெய் தடவுவவதன் மூலம், நரம்பு மண்டலத்தை தளர்வடையச் செய்யலாம்.
*தினமும் மாலையில் அப்யங்கா எண்ணெய் மசாஜ் செய்வது உடலையும் மனதையும் தளர்வடையச் செய்யும்.
*தியானம், பிராணாயாமம் ஆகியன மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தி, நிம்மதியான தூக்கத்திற்கு உதவுகின்றன.
*தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுப்பதையும், எழுந்திருப்பதையும் திட்டமிட்டு கடைப்பிடிக்க வேண்டும்.
*பகல் தூக்கத்தை கை விட வேண்டும்.
*தினமும் மிதமான உடல் செயல்பாடுகள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர் வேதிக் கிளினிக்,
எண்: 11,பாரதிதாசன் தெரு,பிள்ளையார் கோயில் எதிரில்,
மஞ்சக்குப்பம்,
கடலூர்-607001
93676 22256.
– ஹெல்த் அண்ட் பியூட்டி (Read Health and beauty)

