
இதயம் ஒரு முறை சுருங்கி விரிவதை ‘இதயத் துடிப்பு’ (Heart beat) என்கிறோம்.மனித இதயம் ஒரு நிமிடத்திற்குச் சராசரியாக 72 முறை
துடிக்கிறது.தாயின் வயிற்றில் நான்கு வாரக் குழந்தையாக இருக்கும்போது துடிக்க ஆரம்பிக்கும் இதயம்,நம் வாழ்நாள் முழுவதும் துடிக்கிறது.ஓய்வு எடுப்பது இல்லை.
பொதுவாக, உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இதயத் துடிப்பின் எண்ணிக்கை குறையும்.எடை குறைவாக இருந்தால் துடிப்பு கூடும். உதாரணமாக, நீலத் திமிங்கிலத்தின் இதயம் நிமிடத்துக்கு 10 முறை துடிக்கும்.
இதயம் துடிக்கும்போது ரத்தம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் வில்லியம் ஹார்வி.இப்படி ரத்தம் ஓட ஓர் அழுத்தம் தேவை. அதை இதயம்தான் கொடுக்கிறது. அதுதான் ரத்த அழுத்தம்.
-டாக்டர்.கு.க.

