ன்று எல்லா அலுவலகங்களிலும் கம்ப்யூட்டர் சார்ந்த பணிகள் தான் அதிகம்.மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் பார்த்து பணி செய்வதால் பல்வேறு பிர்ச்னைகள் ஏற்படுகின்றன.கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கண்ணில் ஈரப்பசை இருக்க வேண்டும்.

இதற்குத்தான் இமைகள் அடிக்கடி மூடித் திறக்கின்றன. பொதுவாக ஒரு நிமிடத்தில் 12 முறை கண்களைச் சிமிட்டு வோம்‌.ஆனால் தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றுகிறவர்கள் 5 முறைதான் சிமிட்டுகிறார்கள். இதனால் கண்கள் வறண்டுவிடுகின்றன. சோர்வடைகின்றன.

கண்ணில் எரிச்சல், உறுத்தல்,தலைவலி போன்ற தொல்லைகள் வருகின்றன.இதற்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’என்று பெயர்.இதனைத் தவிர்க்க 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தள்ளி இருக்கின்ற பொருளை 20 விநாடிகளுக்குப் பார்க்க வேண்டும். அல்லது அடிக்கடி இமைகளை இமைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.