உடலை பாதுகாக்க தோட்டத்தில் வளரும் (நகரத்தில் இருப்பவர்கள்கூட சிறு தொட்டியில் வளர்க்கலாம்) கற்றாழை போதும். புற்றுநோய் செல்களை எதிர்த்து செயல்படும் திறன் கற்றாழைக்கு உண்டு. கற்றாழையை அடிக்கடி பயன்படுத்தி வந்ததால்தான் நம் முன்னோர்கள் நோய்களால் அதிகம் பாதிக்கப்படாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தார்கள்.

கருப்பை சார்ந்த தொந்தரவுகளுக்கு கற்றாழையை மருந்தாக பயன்படுத்தலாம். கற்றாழையின் சதைப்பகுதியை மோரிலே கலந்து குடிக்கலாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை தொந்தரவுகள் மறையும். குளிர்ச்சி தன்மையை அடைவதோடு ஆயுளும் பெருகும். சித்த, ஆயுர்வேத மருந்துகளில் கற்றாழையை பெருமளவில் பயன்படுத்துகிறார்கள்.