டாக்டர் எஸ்.முத்தமிழ் தங்கம்,B.H.M.S,தீபம் மாற்று மருத்துவ கிளினிக்,சாத்தூர்.

மிழ் நாட்டில் மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது.டிசம்பர் மாதம் வரை தொடரலாம்.இந்த பருவத்தில் ஏற்படும் ஈரமான சூழல் கிருமிகள்,தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் வளர ஏதுவான நிலையை உருவாக்குகிறது.

ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீரில் கொடிய நோய்களை பரப்பும் கொசுக்கள் முட்டையிட்டு,லார்வாக்கள் முதிர்ந்த கொசுவாக பல்கிப் பெருகி தொல்லை கொடுக்கும் நிலை ஏற்படுகிறது.

மழைக்கால நோய்களில் காய்ச்சல் ஒரு பொதுவான நோய் அறிகுறியாக இருக்கிறது.குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காத நிலையில்… அவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

டெங்கு காய்ச்சல்:

இந்த காய்ச்சல் வைரஸ்களால் உண்டாகிறது.இதற்கு முக்கிய காரணம் கொசுக்கள் தான்.டெங்கு வைரஸால் பாதிப்படைந்த “ஏடிஸ் எஜிப்தி” என்னும் கொசுக்கள் நம்மை கடிக்கும்போது டெங்கு உண்டாகிறது.

அறிகுறிகள்

அதிக காய்ச்சல்(104 °F), உடல் சோர்வு,தலைவலி, மூட்டுவலி,தலைவலி, கண்களுக்கு பின்புறம் வலி,தோல் சினப்பு, நமைச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.இதனை எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் சொல்வார்கள். இந்த காய்ச்சலினால் உண்டாகும் வலி எலும்புகளை உடைப்பதைப் போல் உணர்வாளர்கள்.

பெரும்பாலும் 2 முதல் 7 நாட்களில் குணம் அடைந்து விடுவார்கள்.வெகு சிலருக்கு கடுமையான டெங்கு ரத்தக் கசிவு காய்ச்சல் ஏற்படலாம்.இது உயிருக்கு ஆபத்தானது.காலம் தாழ்த்தாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

மலேரியா:

மலேரியா ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.மனிதர்களிடம் பரப்புவது,பெண் அனாஃபிலிஸ் கொசுக்கள்.இந்த பாதிப்பு பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும்.

அறிகுறிகள்

கொசு கடித்து 6 முதல் 30 நாட்களுக்குப் பின்னர் அறிகுறிகள் தோன்றலாம்.விட்டுவிட்டு காய்ச்சல் வரலாம்.குளிர்,நடுக்கம், சோர்வு,தலைவலி, உடல் பலவீனம்,வாந்தி, வயிற்றுப் போக்கு, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.சரியான சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருந்தால் மிகவும் ஆபத்தாகிவிடும். குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் வாய்ப்பும் உண்டு.

சிக்கன் குனியா:

இதுவும் கொசுக்களால் பரவும் நோய்.கடுமையான மூட்டுவலி,தலைவலி, தசைவலி, சோர்வு,சொறி,சிலருக்கு காய்ச்சலால் எற்படும் மூட்டுவலி சில வாரங்கள்,சில மாதங்கள், ஓர் ஆண்டு வரை கூட நீடிக்கலாம்.ஒரு சிலர் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

டைபாய்டு:

மாசடைந்த தண்ணீர், காற்றால் பரவலாம்‌.சுற்றுப்புற சுகாதாரம் சரி இல்லாமல் இருந்தால் எளிதாக பரவும்.மலம் கழித்த பின் கை கழுவும் பழக்கம் இல்லாதவர்கள் மூலமாக பரவலாம்.

அறிகுறிகள்

படிப்படியாக காய்ச்சல் உயரும்.மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.குளிர், தலைவலி,வாந்தி, குமட்டல்,வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, பசியின்மை, தலைவலி, மலச்சிக்கல், தட்டையான இளஞ்சிவப்பு நிறப் புள்ளிகள் அடிவயிற்றிலும் மார்பிலும் ஏற்படலாம்.

காலரா:

இது சிறுகுடலில் ஏற்படும் தொற்றாகும்.பாக்டீரியா தொற்று பாதிப்பு உள்ளவர்களால் மற்றவர்களுக்கும் பரவும்.

அறிகுறிகள்

வாந்தி,பேதி, வயிற்றோட்டம் அதிகமாக இருக்கும்.அதிக காய்ச்சல்,எடை இழப்பு,அதிக தாகம், குமட்டல், ரத்த அழுத்தம் குறைவு,வாய், மூக்கு வறட்சி, வாந்தி பேதியால் பொட்டாசியம் குறைவு பாதிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.இதற்கும் முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தா கலாம்.

ஹோமியோபதி மருந்துகள்!

யூபடோரியம் பெர்போலியேட்டம்

அடிக்கடி ஏற்படும் குளிர் காய்ச்சல்,வாந்தி, எலும்புகளில் வலி, அதீத தாகம், மலேரியா,டெங்குவுடன் எலும்பு வலி போன்ற அறிகுறிகளைக் இந்த ஹோமியோபதி மருந்து சிறப்பாக உதவும்.

அல்லியம் சீபா

மூக்கில் நீர் ஒழுகுவது, கண்களில் நீர் வடிதல், இருமல்,தும்மல், தொண்டை கரகரப்பு,சளி, வலுவான வாசனைக்கு அதிக உணர்ச்சி போன்ற அறிகுறிகளைக் இந்த மருந்து நல்லது.

ஆர்ஸ் ஆல்ப்

அதிக காய்ச்சல், சுழற்சி காய்ச்சலுடன் அதிக சோர்வு, சில்லென்ற வேர்வை, டைபாய்டு பாதிப்புக்கு பிறகான தொந்தரவுகள், ஆஸ்துமா, மூச்சுத் திணறல், மூக்கு ஒழுகல்,அரிப்புத் தன்மையுடன் இருக்கும் அலர்ஜிகள் இருந்தால் இந்த மருந்து பயன்படும்.

ரஸ் டாக்ஸ்

டைபாய்டு காய்ச்சல், சுழற்சி காய்ச்சல், மூட்டுகளில் வலி, வீக்கம், வறண்ட இருமல், நரம்புகளில் சில்லென்ற நீர் ஊற்றியது போன்ற குளிர், குளிரும் காய்ச்சலும் மாறி மாறி வருவது, மழைக்காலங்களில் வரும் நோய்களுக்கு உதவும் முக்கியமான மருந்து இது.

பெர்ரம் பாஸ்

அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் பொருந்தும்.

நேட்ரம் சல்ப்

மழைக்காலத்தில் ஈரமான சூழலுக்கு ஏற்ற மருந்து.ஆஸ்துமா, மூச்சுத் திணறல், இருமல், சளி’குழந்தைகளுக்கான தொந்தரவுகளுக்கு உதவும்.

டல்கமரா

ஈரமான சூழலுக்குப் பிறகு சளி மற்றும் வயிற்றுப் போக்கு, மூக்கு அடைப்பு,மழை நேரங்களில் வரும் தொந்தரவுகளுக்கு ஏற்ற மருந்து.

ஷிபர் சல்ப்

ஈரமான,ஜில்லென்ற சூழல்… தும்மல், மூக்கடைப்பு, தொண்டை குத்துவது போன்ற உணர்வு, விழுங்கும் போது வலி காதுகளுக்கு பரவுவது, தொண்டை செருமல்,சளியை அடிக்கடி துப்புதல்,இருமலுடன் வரும் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, லேசான குளிர் பட்டாலும் சில்லென்று சிரமப் படுவது… போன்ற அறிகுறிகள் இருந்தால் இந்த மருந்து பயன்படும்.

சின்கோனா

சுழற்சி காய்ச்சல், உடலில் நீர்ச் சத்து குறைந்தால் ஏற்படும் உபாதைகள்,மலேரியா, காய்ச்சலால் எற்படும் அதிகப்படியான வியர்வை தொந்தரவுகள் நீங்க இந்த மருந்து பயன்படும்.

ஹோமியோபதி மருந்துகளுக்கு பக்க விளைவுகள் இல்லை. விலை மலிவு‌.எளிதாக சப்பி சாப்பிடலாம். தேர்ச்சி பெற்ற ஹோமியோபதி நிபுணர்களின் ஆலோசனை பெற்று மருந்துகளை பயன்படுத்த வேண்டும். முதல் உதவி ஹோமியோபதி மருந்துகளும் கிடைக்கின்றன.

தகவல் தொடர்புக்கு:
944318 4814/04562-263168.