
-டாக்டர்.எஸ்.அமுதகுமார்.
ரத்தம் வந்தால் யாராலும் தாங்க முடியாது.சிறு துளியாக இருந்தாலும் வீணாகிறதே என்று பதறுவோம்.விரலில் காயம் ஏற்பட்டு சில துளிகள் ரத்தம் வந்தால், உடனே விரலை வாயில் வைத்து உறிஞ்சி ரத்தம் வெளியேறாமல் நிறுத்த முயற்சி செய்யாதீர்கள். பலரும் அப்படித்தான் செய்கிறார்கள்.
ஏன் அப்படி செய்யறீர்கள் என்று கேட்டால், ரத்தம் வீணாகிவிடுகிறதாம். அதனால் ரத்தத்தை உறிஞ்சி மறுபடியும் உடலுக்குள்ளேயே அனுப்புகிறேன் என்று சொல்கிறரர்கள்.
உறிஞ்சும் உங்கள் ரத்தம் உடலுக்கு போய்ச் சேரவும் சேராது, எந்த விதத்திலும் அது உபயோகப்படவும் செய்யாது. உறிஞ்சிய ரத்தத்தை வெளியே துப்பிவிட்டு, முதலில் காயத்திலிருந்து வெளிவரும் ரத்தத்தை, நிறுத்தும் வேலையப்பாருங்கள். அது தான் உடனே செய்ய வேண்டிய முதல் உதவி.

