-ஜி.நளினி,எஸ்.ஆர்.எம்.கல்லூரி.காட்டாங்கொளத்தூர்.

ட்டுக்கறி, கோழிக்கறி எதுவாக இருந்தாலும் போதுமான அளவு வெப்பநிலையில் சமைக்க வேண்டும். சமைத்ததை விரைவாக பயன்படுத்த வேண்டும்.

சரியாக சமைக்காமல், அலட்சியமாக இருப்பதும் குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக பராமரிக்கத் தவறினால் உணவு கெட்டுப்போகும். ஸ்டார்ஓட்டல்களில் ஷவர்மா போன்ற உணவு வகைகளை தயாரிக்க உதவும் இறைச்சிகள் வெளியில் கம்பிகளில் பல மணி  நேரத்துக்குச் சுற்றிவைக்கப்பட்டிருக்கும்.அப்போது  அவற்றில் பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். நன்றாக  வேகவைத்த இறைச்சியில் பாக்டீரியா அழிந்துவிடும். 

முறையாக வேகவைக்காத அல்லது பதப்படுத்தப்படாத இறைச்சியில் பாக்டீரியா அழியாது.அப்போது அவை உணவை நஞ்சாக்கிவிடும்.அவை வெளியிடும் நச்சுகள் காரணமாகப் பயனாளிக்குக் கடுமையாக வாந்தி,  வயிற்றுப்போக்கு ஏற்படும். பெரியவர்களுக்கு நோய்  எதிர்ப்பு சக்தி இருப்பதால், இந்த அளவோடு பாதிப்புகள்  நின்றுவிடும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி  குறைவு என்பதால், இதன் பாதிப்பு உயிரிழப்பு வரை சென்றுவிடுகிறது. இறைச்சியை நன்றாக வேக வைக்க வேண்டும்.

அப்படி வேக வைத்ததை 2 மணி நேரத்திற்குள்  பயன்படுத்திவிட வேண்டும். குளிர்சாதனப்பெட்டியில்  பாதுகாத்து மறுபடியும் மறுபடியும் வேக வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சரியான வெப்பநிலையில் அவற்றைப் பாதுகாக்காவிட்டால் கிருமிகள் வளர்ந்துவிடும். உணவைச் சாப்பிடும்போது மணம், சுவையில் வித்தியாசம் தெரிந்தால் உடனே அதை உண்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.வாந்தி,  வயிற்றுப்போக்கு இருந்தால் சுயமருத்துவம்  செய்யாதீர்கள்.

உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.எவ்வளவு விரைவில் நச்சுணவுக்கு சிகிச்சை கிடைக்கிறதோ அவ்வளவு விரைவில் நிவாரணமும்  கிடைக்கும். சிகிச்சை கிடைக்க தாமதம் ஆனால் உயிருக்கு ஆபத்தாகும்.எனவே அசைவம் ஆபத்தானது அல்ல.அசைவ உணவுகளை சமைப்பதிலும் பாதுகாப்பதிலும் அலட்சியமாக இருப்பது தான் பிரச்சினை.

உணவு விடுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.திரும்பத் திரும்ப பயிற்சி தர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.