டாக்டர் டி.காமராஜ், MD (பாலியல் நிபுணர்)

தாம்பத்திய உறவு உடம்புக்கு தேவையானது,உடல் நலத்துக்கு மிகவும் அவசியமானது.மனிதனோட உடல் நலத்திற்கும் இதயத்துக்கும் ரத்த ஓட்டத்திற்கும் செக்ஸ் நல்லது என்கிறது மருத்துவ ஆய்வு. தாம்பத்திய உறவில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் நீழும் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை.

செக்ஸ் பற்றி முதன் முதலில் உலகத்துக்கே தெளிவாக எடுத்துச் சொன்னது நம் நாடு தான்.தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்,பெண் உடல் ரகசியங்களை,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் காமசூத்திரமாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

அன்பு,கோபம்,அழுகை வெறுப்பு,ஆசை,காதல்,காமம் என மனித உயிர்களை ஆட்டிப்படைக்கும் உணவுகள் ஏராளம்.இதில் காதலும் காமமும் தவிர்க்க முடியாதது என்பது எவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய உண்மை.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பாலுணர்வு இளமைப் பருவத்தில் தொடங்கி முதிய பருவம் வரையில் தொடர்ந்து வரக்கூடியது;இன்பத்தை, குழந்தை செல்வத்தை அளிக்க வல்லது.

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு,இல்லற வாழ்வில் கசப்பான ஒன்றாக கடுமையான ஏமாற்றத்தை தரக்கூடியது ஆண்மைக்குறைவு.

நாள்பட்ட சக்கரை நோயால் ஏற்படக்கூடியது நரம்பு பாதிப்புகள்.இதனால் ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம்.நரம்பு மண்டல பாதிப்பில் குறிப்பிடத்தக்கது ஆண்மை குறைபாடு.

சர்க்கரை பாதிப்பு இல்லாதவர்களைவிட,சர்க்கரை நோயுடன் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.தவிர,பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே விரைப்புத் தன்மை குறைந்து விடுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஆண்மைக்குறைவு ஏற்படுவதைத் தவிர்க்கவும்,குறைபாடு அதிகரிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி,ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது முதல் வேலை.இதற்கு பரிசோதனை முதல் சிகிச்சை வரை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கட்டுப்பாடான வாழ்க்கை,ஊட்டமுள்ள – அதேவேளையில் சர்க்கரையை மிகைப்படுத்தாத உணவு முறை,உடற் பயிற்சிகள், சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுதல், ரத்த அழுத்தத்தை கட்டுப் பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல் ஆகியவை மிக முக்கியம்.

ரத்த சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இலக்காக வைத்து அதற்கேற்ற வழிமுறைகளை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு, ஆண்மைக் குறைவு ஏற்படாமலும் தடுத்துக்கொள்ளலாம்.

வாழ்நாள் முழுவதும் தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ முடியும்.