
தனி மனித சுகாதாரத்தில் மிக முக்கியமானது நகங்கள் பராமரிப்பு.விரல் நகங்களைக் கடிக்காதீர்கள்.இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நகங்களைக் கவனமாக வெட்ட வேண்டும். முக்கியமாக, பிளேடால் அல்லது கத்திரிக்கோலால் நகங்களை வெட்டாதீர்கள். நகவெட்டியால் வெட்டுங்கள். நகங்களை ஒட்ட வெட்டாதீர்கள். முக்கியமாக, ஓரங்களில் உள்ள நகங்களை வெட்டும்போது அதிக கவனம் தேவை. குளித்து முடித்ததும் நகங்களை வெட்டுவது நல்லது.
பொதுவாக, கால் விரல் நகங்களை வெட்டுவதற்குக் கடினமாக இருக்கும். அப்போது உப்புத்தண்ணீரில் அதாவது, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சமையல் உப்பைக் கரைத் துக்கொண்டு, அந்தத் தண்ணீரில் கால் விரல்களை சுமார் பத்து நிமிடங்களுக்கு ஊறவைத்த பின் நகம் வெட்டினால் எளிதாக இருக்கும். நகம் வெட்டும் கருவியையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

