வைரஸ் கிருமித் தொற்றால் வருகிற ஒரு பிரச்னை மரு. குட்டி குட்டியாக முத்துப்போல் வருவது ஒரு வகை. பாலுண்ணி (Molluscum contagiosum) என்று இதைச் சொல்கிறார்கள். தொட்டால் பஞ்சுமாதிரி மிருதுவாக இருக்கும். முகம்,கழுத்துப் பகுதிகளில் வரும். குழந்தைகளுக்குத்தான் இது அதிகமாக வரும்.அடுத்து,வார்ட் (Wart) என்று ஒரு வகை.இது பாலுண்ணியை விட சற்று பெரிதாக இருக்கும்.முகம்,கை, கால் என்று உடலில் பல இடங்களில் வரக்கூடியது. மருக்களை அகற்ற சாலிசிலிக் அமிலம், லேக்டிக் அமிலம், கிரியோசர்ஜரி (Cryosurgery), மின் வெப்ப சிகிச்சை (Electrocauterization)போன்றவை உதவுகின்றன.

மருக்கள் பொதுவாக தானாகவே மறைந்துவிடும், சில நேரங்களில் சிகிச்சை தேவைப்படலாம்.

வீட்டிலேயே சிகிச்சை பெற,சாலிசிலிக் அமிலத்தை (Salicylic acid) பயன்படுத்தலாம். இது மருக்களை மென்மையாக்கி, படிப்படியாக அகற்ற உதவும்.மருக்கள் ஆபத்தானவை அல்ல.அச்சப்பட தேவை இல்லை.

மிகவும் தொந்தரவாக இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறலாம்.