டாக்டர் நிவேதிதா எம்டி, மகப்பேறு மருத்துவர்
வாழ்க்கையில் மிகவும் கடினமான நாட்கள் எவை என பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்.. அந்த 3 நாட்களைத்தான் பலரும் குறிப்பிடுவார்கள். மனதளவிலும், உடலளவிலும் தளரச் செய்து எதிலும் விருப்பமின்றி எரிச்சலைக் கூட்டும் அந்த நாட்களின் அவதிகள் சொல்லி மாளாதவை.
மாதவிலக்க பிரச்னை வயது வித்தியாசம் இன்றி அநேகம் பெண்களுக்கு இருக்கிறது.

மாதவிலக்கின் அளவானது மாதாமாதம் மாறுபடலாம். கூடலாம், குறையலாம். வெளியேறும் ரத்தமானது கட்டிகளாக இருந்தால் மட்டும் மருத்துவ ஆலோசனை அவசியம்.
· திடீரென ஒரு மாதம் வராமல் போனாலும் பயப்படத் தேவையில்லை. கர்ப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை என உறுதியாக நம்பினால்.. வராதது குறித்து கலங்க வேண்டாம்.
· பூப்பு எய்த சில மாதங்களுக்கு மாதவிடா வராமல் இருப்பது சகஜம்தான். சுழற்சி ஒரு வருடத்திற்குள் சரியாக வாய்ப்புண்டு.
· அளவுக்கு அதிகமாக எடை கூடினாலோ, குறைந்தாலோ மாதவிலக்கு சுழற்சி மாறுபடலாம்.
· ரத்தப்போக்கின் அளவில் பலரும் குழப்பம் அடைகிறார்கள்.
· ஒரு நாளைக்கு பத்துக்கும் மேலான நாப்கின்கள் பயன்படுத்த வேண்டிய நிலை அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அது ஆபத்தானது.
· 3 முதல் 5 நாட்கள் வரை மாதவிலக்கு நீடிப்பது இயல்பானது.
· சிலருக்கு 2 நாட்களில் நிற்கலாம். சிலருக்கு 7 நாட்கள் வரை நீடிக்கலாம். 7 நாட்களை தாண்டினால் மருத்துவ ஆலோசனை அவசியம்.
· உயிரே போகிற மாதிரியான வலியை உணர்வது பலருக்கும் நடக்கிறது.
· இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.
· தாங்க முடியாத வலி தொடர்ந்தால் வலி உள்ள இடங்களில் வெந்நீர் ஒத்தடம் தருவது இதமளிக்கும்.
· பழங்கள், கொட்டை வகைகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

