
மனித உடல் ஓர் உயிருள்ள அதிசய இயந்திரம்.மருத்துவ அறிவியல் அறிந்தவர்கள் இதை அறிவார்கள்.
இந்த அதிசய இயந்திரத்தை எவராலும் உருவாக்க முடியாது.உடல் நலம் பெற பலவிதமான சிகிச்சை முறைகள் உள்ளன.உலக அளவில் வளர்ந்து வரும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் முதன்மை இடத்தில் உள்ளது அக்குபஞ்சர். நோய்களுக்கான தீர்வளிப்பதில் மிக சிறப்பாக செயலாற்றும் அக்குபஞ்சர் சிகிச்சைக்கு முதன் முதலாக,”கவுன்சில் ஆஃப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ்” என்ற அமைப்பை நிறுவியவர்கள் சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி மற்றும் அவரது துணைவியார் பேராசிரியர் டாக்டர் உஷாரவி ஆகியோர்.

இந்த சிகிச்சை முறை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் உள்ளது.இதை சீன மருத்துவம் என்றும் சொல்வார்கள்.
“சுயசிகிச்சை”, “குத்தூசி மருத்துவம்” உள்ளிட்ட பல பெயர்களில் தொன்று தொட்டு அழைக்கப்படுகிறது.
1980களில் இந்தியாவில் மீண்டும் இந்த அக்குபஞ்சர் சிகிச்சை முறைகள் புத்துயிர் பெறத் தொடங்கியது.

1994 முதல் இந்த அக்குபஞ்சர் சிகிச்சை முறைக்கு ஏதாவது ஒரு வகையில் அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட ஆரம்பித்தவர்கள் பலர் உண்டு.
சட்ட ரீதியாகவும் தர்மரீதியாகவும் கடலூர் சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி அவர்கள் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு அக்குபஞ்சர் சிகிச்சை முறையை பாதுகாக்கவும், வளர்க்கவும், அக்குபஞ்சர் நிபுணர்கள் சிகிச்சையளிக்க பரிந்துரைக்கவும் போராடினார்.
ஏறக்குறைய 10ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து,சாத்வீகமாக அரசுக்கு பல ஆவணங்களை சமர்ப்பித்ததின் பயனாக 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அக்குபஞ்சரை ஒரு முறையான சிகிச்சையாக(MODE OF THERAPY) அங்கீகரித்தது.

கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டர்…என்ற முன்னோடியான அமைப்பை முதன்முதலாக நிறுவி அக்குபஞ்சர் சிகிச்சைக்காக முறையான நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது.
அக்குபஞ்சர் நிபுணர்கள் மேலும் சிறப்பாக செயல்படும் விதமாக கடந்த 28ஆண்டுகளாக இடையாறாது செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு.
இந்த அமைப்பின் 28ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 09.04.2026 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது!

கடந்த 2 ஆண்டுகளாக செயற் தலைவராக செயலாற்றி வரும் திருநெல்வேலி டாக்டர் ஜே.. அனந்தகிருஷ்ணன் அவர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தார். செயலாளர் டாக்டர் கே.ஜி.மனோஜ் பொருளாளர், ஊத்துக்குளி டாக்டர் கிருஷ்ணசிவச்சலபதி மற்றும் மண்டலத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பொதுக்குழு கூட்டத்திற்கு கவுன்சிலின் நிறுவனர் டாக்டர் சி.ஏ.ரவி தலைமை ஏற்றார்.
அக்குபஞ்சர் கவுன்சிலை உருவாக்குவதற்கு எப்படி எல்லாம் பாடுபட்டார் என்பதை உருக்கத்தோடு பதிவு செய்தார்.

அக்குபஞ்சர் சிகிச்சையின் மகத்துவத்தை உணர்ந்து,இந்த சிகிச்சை முறை எப்படியாவது மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்ற தணியாத தாகத்தில் ஏராளமான பேர் உதவி செய்ததாக டாக்டர் ரவி குறிப்பிட்டார்.
அக்குபஞ்சர் கவுன்சிலின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவி செய்த,செயல் தலைவர் டாக்டர் ஜெ. அனந்தகிருஷ்ணன், டாக்டர் யோகேஸ்வரி ஆகியோரை பாராட்டி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் டாக்டர் உஷாரரவி, அக்குபஞ்சர் மருத்துவத்தின் தாத்பரியத்தை, மருத்துவ ஆராய்ச்சி விவரங்களை எடுத்துரைத்தார்.
டாக்டர் கே.ஜி. மனோஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
டாக்டர் கிருஷ்ணசிவசலபதி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கவுன்சிலின் நிகழ்வுகளை டாக்டர் ராஜலிங்கம்,டாக்டர் யோகேஸ்வரி,டாக்டர் சிவராமன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். ஹோமியோபதி மருத்துவர் எம். கிருத்திகா “ஹோமியோபஞ்சர்”கட்டுரையை வெளியிட்டார்.
மருந்தில்லா மருத்துவம் என்பது சாதாரண, ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
பக்க விளைவுகள் இல்லாத அக்குபஞ்சர் மருத்துவம் சிறக்க சீரிய முறையில் பாடுபட்டு வரும் டாக்டர் சி.ஏ.ரவி அவர்களுக்கும், டாக்டர் உஷாரவி அவர்களுக்கும் நமது இதழ் சார்பில் பாராட்டுகள்.
மருத்துவ தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
-பவித்ரன்.

