டாக்டர் சு.முத்து செல்லக்குமார்,M.D,Dip.in diabetic

மது தினசரி உணவில் இடம்பெற வேண்டிய உணவுப் பொருள்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.நல்ல உணவு எது, கெடுதல் செய்யும் உணவு எது என்பதை அறிந்து செயல்பட்டால் தான் நலமுடன் வாழ முடியும்.

ஊறு விளைவிக்கும் ஊறுகாய்

ஊறுகாய் என்றாலே நம்மில் பெரும்பாலானோ ருக்கு நாவில் எச்சில் ஊறும். ஊறுகாயை விரும் பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. விருப்பத்துடன் சாப்பிடத் தூண்டும் ஓர் உணவு ஊக்கியாகவும் ஊறுகாய் செயல்படுகிறது.

திருமணமாகாமல் இருப்பவர்களின் தினசரி மெனுவில் அடிக்கடி இடம்பெறுவது தயிர் சாதமும் ஊறுகாயும்தான். வீட்டில் சமைப்பவர்களும் சரி, மது அருந்துபவர்களும் சரி, ‘தொட்டுக்கொள்ள ஊறுகாயையே தேடுகிறார்கள். மிகப்பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில்கூட  விதவிதமான ஊறுகாய் வகைகள் இடம் பிடிக்கின்றன.

நம்மில் எவராவது வெளிநாட்டுக்குப் போகிறோம் என்றால், அங்கு கிடைக்காததை இங்கிருந்து எடுத்துச்செல்ல விரும்பினால், முதலில் இடம் பிடிப்பது ஊறுகாய்தான். இப்படி நமது உணவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள ஊறுகாய் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகள் குறித்தும், இதய நோய் குறித்தும், நாம் ஒவ்வொருவரும் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும்.

மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், வெள்ளைப்பூண்டு என ஊறுகாய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. எந்த வகையாக இருந்தாலும் அதில் சேர்க்கப்படும் பிற பொருள்களில் பெரிய வித்தியாசம் இல்லை.

பொதுவாக, ஊறுகாய் தயாரிக்கும்போது, உப்பு, காரத்துக்காக மிளகாய்ப் பொடி, எண்ணெய், நிறத்துக்கான பொருள்கள், நீண்டநாள் கெடாமல் இருப்பதற்கான பொருள்கள் ஆகியவை சேர்க்கப்படும்.

ஊறுகாய், அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டுத்தான் தயாரிக்கப் படுகிறது. அத்துடன் எண்ணெய்யும் சேர்க்கப்படுவதால், ஊறுகாய், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயநோய் களுக்கும் வழி வகுக்கும். மேலும், சேர்க்கப்படும் எண் ணெய்யைப் பொறுத்து, இதில் உள்ள கொழுப்பு அளவுகள் மாறுபடும்.

பெரும்பாலும் ஊறுகாய் வகைகள், அதிக சக்தியைத் தருவ துடன், அதிகக் கொழுப்புச் சத்தையும் கொண்டதாக இருக் கின்றன. அத்துடன், இதில் உள்ள அமிலத்தன்மையால் வைட்டமின்களும் அழிக்கப்படுகின்றன. வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண்களையும் ஊறுகாய் உருவாக்குகிறது.

எனவே, இதய நோய்களைத் தடுக்க நினைப்பவர்கள், மேற் கூறிய முறையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் கடை ஊறு காயைத் தவிர்ப்பதுடன், வீட்டிலும் இதேபோல் ஊறுகாய் தயாரித்து உட்கொள்வதைத் தவிர்த்துவிட வேண்டும்.

மாற்று வழி உண்டா?

ஊறுகாய் சாப்பிட விரும்புகிறவர்கள், பச்சை மாங்காய், அத்துடன் வெங்காயம், வெள்ளரி ஆகியவற்றை ஒரு பச்சை மிளகாய் சேர்த்து சாலட் போன்று தயாரித்துச் சாப்பிடலாம். இதனால், வைட்டமின்கள் கிடைப்பதுடன், வயிற்று எரிச்சல் ஏற்படாது. இதில் எண்ணெய், உப்பையும் பயன் படுத்தத் தேவையில்லை.