
காவேரி மருத்துவமனை குழுமத்தில் வயிறு, குடல் சிறப்பு நிபுணர் டாக்டர் பி.பாசுமணி தலைமையில் குடல் ரத்தக்கசிவுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை தொடங்கி இருக்கிறார்கள்.
செரிமான மண்டலத்தின் உட்புறத்தில் ஏற்படும் ரத்தக்கசிவானது, ஒரு பொதுவான அவசர மருத்துவ பாதிப்பு நிலையாகும். இதற்கு சரியான நேரத்திற்குள் பரிசோதனை, ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் ரத்தக்கசிவை சரிசெய்வதற்கு விரைவான சிகிச்சை அளிப்பதற்காக, காவேரி மருத்துவமனை குழுமம் பிரத்யேக ‘ஜிஐ ப்ளீடு சிகிச்சை மையங்களை’ தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவேரி குழுமத்தின் மருத்துவமனைகளிலும் இந்த மையங்கள் செயல்படும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள 12 மருத்துவமனைகள் மூலம்,குடல் ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே தனிச்சிறப்பான, பல்துறைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவப் பராமரிப்பை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
இந்த சிறப்பு சிகிச்சை மையங்கள்,அவசர சிகிச்சை மருத்துவர்கள், இரைப்பை-குடல் நிபுணர்கள்,தீவிர சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் சிகிச்சை அளிக்கின்றன. அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளி வந்து சேர்வது முதல், ஆபத்தை மதிப்பீடு செய்தல்,தீவிர சிகிச்சை பிரிவு (ICU) அல்லது வார்டில் அனுமதித்தல், எண்டோஸ்கோபி அல்லது கதிரியக்க சிகிச்சைகள் அளித்தல் மற்றும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவது வரை,நோயாளிகள், தெளிவாக வரையறை செய்யப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மிகச் சரியான முறையில் பராமரிப்பை பெறுகின்றனர்.
இந்த மையங்களில் 24/7 அவசர எண்டோஸ்கோபி சேவைகள் மற்றும் ஊசி சிகிச்சை. பேண்ட்லிகேஷன், பசை சிகிச்சை மற்றும் காய்ல் எம்பலைசேஷன் உள்ளிட்ட மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சை வசதிகள் உள்ளன. தேவைப்படும்போது, ரத்தக்கசிவை நிறுத்த கதிரியக்க சிகிச்சைகளும் மற்றும் சிக்கலான பாதிப்புகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று சொல்கிறார்கள்.
குடல் நலமாக இருந்தால் உடல் நலமாக இருக்கும்.
-சேகர். ஹெல்த் அண்ட் பியூட்டி

