
‘எனக்கு நேரமில்லை’ என்று கூறுவது முட்டாளின் சாக்குப்போக்கு. ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தில் கலந்து கொள்ள நீங்கள் அழைக்கப்பட்டாலோ, ஒரு சினிமாவுக்கு உங்களுக்கு இலவச பாஸ் கொடுக்கப்பட்டாலோ, ‘எனக்கு நேரமில்லை’ என்று நீங்கள் ஒருபோதும் சொல்லமாட்டீர்கள்.
எப்படி போகலாம்..என்ன உடை உடுத்தலாம்..என்று முன்கூட்டியே திட்டமிடுவீர்கள்.
‘சுறுசுறுப்பான மனிதன் மாபெரும் ஓய்வு கொண்டிருப்பான்.’ இது பழமொழி. என்னவெனில், சுறுசுறுப்பான நபர் ஒரு விஷயத்தைச் செய்ய விரும்பினால், தனது வேலையை சரியாக அட்டவணைப்படுத்தி நேர்த்தியாக செய்ய முடியும். தேவைப்படும் ஒரேயொரு விஷயம், ஒன்றைச் செய்ய உங்கள் ‘விழைவு மற்றும் மனவுறுதி’. உங்களுக்கு ஆர்வமோ, விழைவோ இல்லாவிட்டால். ஒன்றும் செய்யாமல் இருந்தாலும், நீங்கள் அந்த வேலையை செய்ய முடியாது. சாப்பிடுவது, தூங்குவது, வம்பளப்பது, தொலைக்காட்சி, சினிமா பத்திரிகைகளைப் படிப்பது. சந்தையில் சுற்றுவது ஆகியவற்றில் நேரத்தை வீணடிப்பீர்கள்.
எனவே, உங்கள் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தவோ, மற்றவர்களுக்கு/சமுதாயத்திற்கு பயனுள்ள வேலையை செய்வதற்கோ நேரமில்லை என்று காரணம் கூறாதீர்கள். பதிலாக, உங்களுடைய வழக்கமான வேலைகளில் அவற்றை சேர்த்து, செயல்படத் தொடங்குங்கள். நாம் ஒரு விஷயத்தை செய்ய விரும்பினால்தான், நமக்கு நிறைய நேரம் கிடைக்கும்.
-பவித்ரன்

