
– டாக்டர்.ஜி.ராஜமோகன்
பெரும்பாலான மருந்துகள் பயனற்றவை என்பதை அறிந்தவரே தலைசிறந்த மருத்துவர்
-பெஞ்சமின் ஃபிராங்களின்
உன்னதமான மருத்துவம் என்பது, சரியான நோயாளிக்கு, சரியான மருந்தை, சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான முறையில் வழங்குவதுதான். உங்களுக்குச் சரியான சிகிச்சை கிடைக்க நீங்கள் உங்கள் நோய் பற்றி முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏதேனும் மருந்து, உணவு, ரசாயன வண்ணம் கலந்த உணவு போன்றவற்றைச் சாப்பிட்டபோது ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் அதுபற்றித் தெரிவிக்க வேண்டும்.
எல்லா மருந்து மாத்திரைகளுக்கும் பக்கவிளைவj ஏற்படுத்துக் குணம் உண்டு. எப்படி நோய்களை மருந்து மாத்திரை குணப்படுத்துகிறதோ, அதே அளவுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதையும் புரிந்துகொ வேண்டும்.
80 சதவீத நோய்கள் தானாகவே குணமடையும் தன்மை கொண்டவை என்பதையும், அவற்றுக்கு மருந்து மாத்திரை தேவையில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதனால் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னதாக அதன் தேவை போன்ற வற்றைக் கருத்தில் கொண்டு, தேவையிருந்தால் மட்டும் பயன்படுத்துங்கள்.
குறிப்பாக, புதிய மருந்துகள் என்று மருத்துவர் கொடுக்கும் மருத்துகளைக் கவனமாகவே பயன்படுத்துங்கள். அதிலும், முந்தைய மருந்தை விட, மருத்துவர் தற்போது கொடுக்கும் மருத்தின் விலை அதிகமாக இருந்தால், கூடுதல் கவனம் தேவை.சமீபகாலமாக, புதிய மருந்துகளில் அதிக லாபம் சம்பாதிக்கும் மகுந்து நிறுவனங்கள், தங்கள் மருந்துப் பொருட்களை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்க மருத்துவர்களுக்கு ஏராளமான பணம் வழங்குகின்றன.
புதிய மருந்து சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கையும் தம்மில் பலருக்கு உள்ளது. உண்மை அவ்வாறு இல்லை, புதிய மருந்து பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும். ஏனெனில், புதிய மருந்துகளாக இருப்பதால், அதை அதிகம் பேர் பயன்படுத்தி, அதன் பக்க விளைவுகளை அனுபவித்திருக்க மாட்டார்கள். அதனால் அந்த மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவர்களும் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஏராளமான மருந்து, மாத்திரைகள் பற்றி மருத்துவர் அறித் திருந்தாலும், நோயாளிக்குக் குறைவான மருந்துகளை வழங் கும் மருத்துவர்தான் சிறப்பான மருத்துவர். மாத்திரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்காமல், உடல் தானாகவே குணம்பெற ஏதுவாக மருத்துவர் செயலாற்றுவதே நல்லது.
கூடுமானவரை மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் இருப் பது நல்லது. கருவுற்ற தாய்மார்கள், மருந்து மாத்திரைகள் சாப்பிடாமல் இருந்தால் அவர்கள் நலமாக உணர்வார்கள். அவர்களுடைய அனுபவத்தை நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கட்டாயம் மருந்து எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்ற நிலையில், குறைவாக எடுத்துக் கொண்டு, விரைவிலேயே அதை விட்டுவிட வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகளை, அவை மருந்துக்கடைகளில் நேரடியாக வாங்குபவையாக இருந்தாலும் சரி, அவற்றை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
எடுத்துக் கொள்ளும் மருந்தின் செயல், பக்கவிளைவு, மாற்று மருந்து போன்ற விவரங்களை மருத்துவ இதழ்கள், இணையத்தளம் போன்றவற்றின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி மருந்து கொடுக்க வேண்டாம்.
மருந்து தயாரிப்பாளர்களின் ஆடம்பர விளம்பரங்களை அப்படியே நம்ப வேண்டாம்.
ஈயை விரட்ட பீரங்கி வேண்டாம். தானாகக் குணம் கிடைக்கும் நோய்களுக்கு, தேவையில்லாமல் மருந்து சாப்பிட வேண்டாம்.
வாய்வழியாக மருந்துகளை உட்கொள்ளும் பழக்கம் நல்லது. நம்மில் பலர் மருந்து மாத்திரையை விட, ஊசி தான் விரைவாகச் செயலாற்றும் என்று நம்புகின்றனர். அதில் உண்மையில்லை. இரண்டும் ஒரே செயலாற்றல் கொண்டவைதான்.
நீண்டகாலத்துக்குச் சாப்பிட வேண்டிய மருந்து என்றால், அவற்றை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வதால், விலை குறைய வாய்ப்பு உள்ளது.
(சில பார்மசிகள் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி தருகிறார்கள்)
விலை குறைவான மருந்துகளைப் பரிந்துரைக்குமாறு மருத்துவரிடம் கேளுங்கள். குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற நோய்களுக்கு ஏராளமான
மருந்துகள், பல்வேறு விலைகளில் உள்ளன. அவற்றில் விலை குறைவான மருந்துகளை கேட்டுப் பெறுங்கள்.
ஏற்கனவே எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை, மருத்துவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் எடுத்துச் செல்லுங்கள்.
ஒரே நேரத்தில் நிறைய மருந்துகளைச் சாப்பிட வேண் டாம். அவ்வாறு சாப்பிட நேரிட்டாலும், குறுகிய காலத் துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீண்டகாலம் இழுத்துச் செல்ல வேண்டாம்.
மருந்தில்லா சிகிச்சை ஏதும் இருந்தால் அதைத் தருமாறு மருத்துவரை கேட்கலாம்.
மருந்துகளுக்கு பக்க விளைவுகள் உண்டு.மருந்துகள் பல தொந்தரவுகளை நோக்கினாலும் சில தொந்தரவுகளை பரிசாக தரலாம்.எச்சரிக்கை தேவை.

