
புடவை, பெண்களுக்கு அழகு தரும் ஆடை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனல் கணவர் ‘பைக்’கை ஓட்டும் போது அவரது பின்னால் இருந்து பயணிக்கும் பெண்கள் புடவை கட்டிக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏன்என்றால், புடவை கட்டி இருந்தால் இரு பக்கமும் கால்களை விரித்து அமர முடியாது.ஒரே பக்கமாக கால்களை போட்டு வண்டியில் அமர வேண்டிய கட்டா யம் ஏற்படும். அப்படி அமரும்போது முது கெலும்புக்கு அதிக அழுத்தம் ஏற்படும். நம்ம ஊர் சாலைகளைப்பற்றி சொல்ல வேண்டுமா…

சரியில்லாத சாலையில் வெகுதூரம் ஒருபுற மாக அமர்ந்து பயணித்தால் முதுகு வலி வர வாய்ப்பு உள்ளது.
கணவரோடு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பெண்கள் சுடிதார், சல்வார்கமீஸ், பேண்ட் போன்றவைகளை அணிந்து இருபுறமாக கால்களை தொங்கப்போட்டு, இயல்பாக அமர்ந்து பயணிக்கவேண்டும்.
முதுகு வலியை நாமாக வரவழைக்காமல் இருப்பது தானே புத்திசாலித்தனம்.
-டாக்டர் பி.ராதாகிருஷ்ணன், ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்

