உள்ளாடைகள் என்பது அழகுக்கு மட்டும்தான் என அலட்சியமாக நினைப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்.
 
உள்ளாடை அழகாக இருப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அது ஃபிட்டாகவும் இருக்க வேண்டும். பெரிதாகவும் இருக்கக்கூடாது; இறுக்கமாக தொந்தரவும் செய்யக்கூடாது.
 
ஒரு நாளைக்கு ஒரு உள்ளாடை என்பது சிலருக்கு பொருந்தாது. உடற்பயிற்சி, நீண்ட தூர பயணம், உடல் உழைப்பு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரு முறை மாற்றிக்கொள்வது அவசியம்.
 
ஒரு நாளைக்கு இரு முறை குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள், உடைகளைப் போலவே உள்ளாடைகளையும் மாற்றுவது முக்கியம்.
 
உள்ளாடைகளை மற்ற ஆடைகளோடு துவைக்க வேண்டாம். வாஷிங்மெஷினிலும்  போட வேண்டாம். தனியாக பிரித்து கையால் சோப்பு போட்டு துவைப்பதே நல்லது.
 
சோப்பு போட்டு துவைத்து விட்டு ஒருமுறைக்கு இருமுறை, தண்ணீரில் நன்கு அலச வேண்டும்.
 
குடும்பம், பாரம்பரிய உணர்வில் உள்ளாடைகளை மற்றவர்கள் பார்வையில் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக… மறைத்து காயவைப்பது நமது பெண்களின் வழக்கமாக உள்ளது.
 
உள்ளாடைகளை வெயிலில் படும் படி காய வைத்தால் சூரிய ஒளியின் புற ஊதா கதிர்கள் துணியில் பட்டு கிருமிகளை அழிக்கும்.
 
புடவை ,சுடிதார் போல் உள்ளாடைகளும் ஒரு உடைதான் என்பதை இயல்பாக்க வேண்டும்.
 
பணச்செலவு என்று தயங்கி வருடக்கணக்கில் உள்ளாடைகளை பயன்படுத்துவது நல்லதல்ல. ஆறுமாதம் அல்லது எட்டு மாதங்களில் உள்ளாடைகளை மாற்றிவிட வேண்டும்.
 
 தைபிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.பொங்கல் திருநாளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் நல்லது. வாழ்த்துகள்.
-பவித்ரன்