
உணவுப் பழக்கத்தில் சிறந்தது சைவமா? அசைவமா? என்ற விவாதம் சதா சர்வகாலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பொதுவாக 50 வயதைக் கடந்தவர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சைவத்துக்கு மாறுகிறார்கள். அசைவம் சாப்பிட்டு பழகியவர்கள் அவ்வளவு எளிதாக மாற முடியாது. எனினும் எது சிறந்தது என்று அறிந்து கொண்டு மாறிக்கொள்வது அவசியம்.
அசைவத்தில் கால் இல்லாத உணவாக தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என்று உணவு நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மீனுக்கு கால் இல்லை. அதை தாராளமாக சாப்பிடலாம். கோழிக்கு இரண்டு கால். அதைக் கொஞ்சமாக சாப்பிடலாம். ஆடு,மாடுகளுக்கு 4 கால் அதை ரொம்பக் குறைவாக சாப்பிட வேண்டும். அசைவம் அதிகம் சாப்பிட்டால் உடல் எடைக் கூடும்; கொழுப்பும் அதிகரிக்கும். அதனால் பிரச்னையும் உண்டாகும்.

