
- பேராசிரியர் டாக்டர் உஷாரவி, தி சுசான்லி கிளினிக்
சென்னை அண்ணாநகரில், ‘தி சுசான்லி கிளினிக்கை’ நடத்தி வருகிறார் பேராசிரியர் டாக்டர் உஷாரவி. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மருந்துகளைப் பற்றி படித்தவர் சென்னை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நேச்சுரோபதி படித்திருக்கிறார். அக்குபஞ்சர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்று தமிழ்நாட்டில் தலைசிறந்த அக்குபஞ்சர் நிபுணர்களில் ஒருவராக திகழ்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என பன்மொழி பாண்டித்யம் பெற்றவர்.
பொதுவாக நல்ல மருத்துவர் என்பவர், நமக்கு சரியான மருத்துவத்தை வழங்குபவராக இருக்க வேண்டும். ஒரு நல்ல மருத்துவர் எப்படி இருப்பார்? திறமைசாலியாகவும், எளிதில் அணுகக் கூடியவராகவும், இணக்கமான மனநிலையைக் கொண்டவராகவும் இருப்பார். தன்னை நாடி வருபவரை கண்ணியமாக நடத்துவது, நிறைய நேரம் செலவிட்டு நோய் பாதிப்பை அறிவது, நேர்மையாக நடந்து கொள்வது, கேள்வி கேட்பதை ஊக்குவிப்பது, சரியான, சிக்கனமான, தரமான சிகிச்சை அளிப்பது, நியாயமான கட்டணத்தை வாங்குவது போன்ற குணங்களும் ஒரு நல்ல மருத்துவருக்கு உண்டு. அப்படிப்பட்ட ஒரு சிறந்த மருத்துவர்தான் டாக்டர் உஷா ரவி. அவரை சந்தித்து உரையாடினோம். அவரது பேட்டியில் இருந்து..
– அக்குபஞ்சர் மருத்துவமுறைக்கு வரவேற்பு எப்படி உள்ளது?
சிறப்பாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தற்போது இல்லை. இன்று பல ஆங்கில மருத்துவர்களே அதை பின்பற்றும் அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எந்த மாதிரியான பிரச்னைகளுக்கு அக்குபஞ்சர் மருத்துவத்தை நாடுகிறார்கள்?
முக்கியமாக வலிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சையினை நாடுகிறார்கள். அக்குபஞ்சர் சிகிச்சை வலிகளுக்கு சிறந்த நிவாரணத்தை தர வல்லது என உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. சொல்லப்போனால் பல நேரங்களில் அக்குபஞ்சர் சிகிச்சை ஓர் அதிசய அதிவேக நிவாரணத்தை தருகிறது.
– இந்த சிகிச்சை முறையில் ஆராய்ச்சிகள் உண்டா? அது பற்றிய புதிய தகவல்கள் ஏதாவது..?
ஒவ்வொரு அக்குபஞ்சர் புள்ளியும் எவ்வாறு செயல்படுகிறது? உடலில் அதன் பங்கு என்ன? இந்த புள்ளிகளை இணைக்கும் சக்தி பாதைகள் எவ்வாறு உள்ளன? போன்றவைகள் பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த்’ (ழிமிபி) ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது. அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொண்டதால் கிடைத்த பலன்கள் குறித்து தினமும் புதிய தகவல்களை தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.
– காஸ்மெட்டிக் அக்குபஞ்சர் என்றால் என்ன?
தோலில் சுருக்கங்கள், பள்ளங்கள், கரும்புள்ளி மங்கு, வெண்புள்ளி மற்றும் முடி பிரச்னைகளுக்கு செய்யப்படும் அக்குபஞ்சர் சிகிச்சை முறைதான் காஸ்மெட்டிக் அக்குபஞ்சர். மேலும், தளர்ந்த முக தசைகள், உடலில் படிந்துள்ள அதிகமான சதையினை மிக எளிமையாக சரி செய்ய முடியும். அழகுடன் ஆரோக்கியமும் சேர்கின்றது.
– குழந்தையின்மை பிரச்னைக்கு அக்குபஞ்சரில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?
நிச்சயமாக! எங்கள் சிகிச்சையின் மூலம் பலர் நன்மை பெற்று, எங்களை வாழ்த்திச் செல்கின்றனர். குழந்தையின்மை தம்பதியினர் அதற்காக சிகிச்சை பெற்று மழலை செல்வத்துடன் எங்களை அணுகி பாராட்டும்போதும், வாழ்த்தும்போதும் கிடைக்கின்றன சந்தோஷம் அலாதியானது. அக்குபஞ்சர் சிகிச்சையுடன் ‘மாக்ஸா’ எனம் சீன பாரம்பரிய முறையிலான ‘ஜோடி சிகிச்சை’யும் அளிக்கிறோம். அதாவது கணவன் & மனைவி இருவருக்கும் சிகிச்சை அளிக்கிறோம். கருத்தரிக்கும் முக்கியமான நாட்களில் ‘சிறப்பு சிகிச்சை’யும் அளிக்கிறோம்.
– இயற்கை மருத்துவ சிகிச்சை (நேச்சுரோபதி) பற்றி சொல்லுங்கள்?
இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழும்போது எந்த பிரச்னையும் வருவதில்லை. அதேபோல் இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ளும்போதும் நல்ல பலன்களே கிடைக்கும். எங்களின் சிகிச்சை முறையில் நோயாளிகள் எங்களிடம் சொல்லாத பிரச்னைகளும் சரியாகிவிடும். ஏனெனில் இந்த மருத்துவம், உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதில்லை. மாறாக உடல் மேம்படவும், நல்ல பலத்தை பெறவும் உறுதுணையாக உள்ளது.
– இயற்கை கூட்டு மருத்துவ சிகிச்சையின் சிறப்பு என்ன?
சில நோய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மட்டுமே போதும். ஆனால், வேறுசில நோய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சையுடன், இயற்கை முறைகளான நேச்சுரோபதி, மூலிகை கட்டு, தைலம் போன்ற முறைகள் கூடுதல் பலனை மிக விரைவிலேயே அளிக்கிறது. எங்களிடம் வருபவர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப இந்த மருத்துவ சிகிச்சை அளிக்கிறோம்.
சர்க்கரை நோயின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. உங்கள் மருத்துவ முறையில் தீர்வு இருக்கிறதா?
சர்க்கரை நோயாளிகளை வைத்து இன்றைக்கு மிகப்பெரிய வியாபாரம் நடக்கின்றது என்றால் மிகையில்லை. அதன்மூலம் நோயாளிகள் பலனடைகிறார்கள் என்றால் இல்லை. ஆனால் இயற்கை, யோக, அக்குபஞ்சர் முறையில் சர்க்கரை நோயினை முழுமையான கட்டுப்பாட்டில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் கொண்டு வரமுடியும்.
– கேரளாவில் ஆயுர்வேத மருத்துவம் வளர்ச்சி அடைந்துள்ளது போல் தமிழகத்தில் மாற்று மருத்துவம் வளரவில்லையே..?
தமிழகத்தில் தமிழ் மருத்துவம் எனப்படும் சித்த மருத்துவம் இன்றைக்கு நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மற்ற மாற்று மருத்துவமுறைகளையும் பெரும்பாலான மக்கள் நாடும் நிலைமை விரைவில் வரும். கடந்த 10 ஆண்டுகளில் 15ல் இருந்து 30 சதவீத மக்கள் மாற்றுமருத்துவத்தை நாடி வந்துள்ளனர்.
– நீங்கள் இதுவரை எத்தனை மாநாடுகளில் பங்கேற்றுள்ளீர்கள்? ஆய்வுக் கட்டுரை ஏதும் சமர்பித்துள்ளீர்களா?
சொல்லப்போனால் என் சுவாசமே அக்குபஞ்சர்தான். கடந்த 28 வருடங்களாக நான் அக்குபஞ்சர் என்றுதான் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறேன். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ‘பார்மஸி’ கோர்ஸ் முடித்தேன். அக்குபஞ்சர் மருத்துவத்தை வெளிநாட்டில் பயின்றேன். இதுவரை 40க்கும் மேற்பட்ட மாநாடுகளில் பங்கேற்றுள்ளேன். 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளேன். 168 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற கருத்தரங்கு சீனாவில் நடந்தது. அதில் நான் சமர்பித்த ‘பை பாஸ் அக்குபஞ்சர்’ (ஙிசீ றிகிஷிஷி கிசிஹிறிஹிழிசிஜிஹிஸிணி) என்ற ஆய்வுக்கட்டுரைக்கு தங்கப்பதக்கம் பரிசாக கிடைத்தது. இதுவரை 50க்கும் மேற்பட்ட விருதுகள் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
‘பை பாஸ் அக்குபஞ்சர்’ என்றால் என்ன?
அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பல பெண்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் பல உடற்குறைபாடுகள் ஏற்படுகின்றது. அதற்கு அக்குபஞ்சர் முறையில் சிறந்த சிகிச்சை உண்டு. மிக எளிதாகவும், குறைந்த செலவிலும் இந்த சிகிச்சையை மேற்கொண்டு குறைபாடுகளை சரிசெய்கிறோம். ரென் என்ற ஓட்டசக்தியினை சீர்செய்ய அக்குபஞ்சர் உதவுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகமாகி வருகின்றதே..
பாலியல் சீண்டல் பெண் குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றது. இதற்காக ‘குட் டச்’ (Good Touch), ‘பேட் டச்’ (Bad Touch) பற்றி சொல்லித் தர வேண்டும் என்று கூறுகின்றனர். நான் ‘நோ டச்’ (No Touch) என்று வலியுறுத்துகிறேன். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கவுன்சில் மீட்டிங்கிலும் பேசியிருக்கிறேன். ‘நோ டச்’ (No Touch) என்ற இந்த கருத்து பல மருத்துவர்கள் மூலமாக பரவி வருகின்றது. உறவோ, நட்போ நம் பெண் குழந்தைகளை தொட்டுப் பேச அனுமதிக்க வேண்டாம்.
மேலும், இறுதியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். இயற்கை உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். செயற்கை உணவுகளை, வெளிநாட்டு உணவுகளை தவிர்த்திடுங்கள். இயற்கை வழி உணவே நம் ஆரோக்கியத்துக்கு அடிகோலும். செயற்கை உணவுகள் நம் ஆரோக்கியத்தை அழித்துவிடும்.
தகவல் தொடர்புக்கு
பேராசிரியர் டாக்டர் உஷாரவி
தி சுசான்லி கிளினிக்
292, இசட் பிளாக், 3வது மாடி
2வது அவென்யூ, டவர் மெட்ரோ ஸ்டேஷன் அருகில்,
அண்ணா நகர், சென்னை & 600 040
போன்: 8925422542 / 9367622256

