கர்ப்பக் காலத்தில் செய்யக் கூடாதவை
டாக்டர் ஹேமா எம்பிபிஎஸ், பொது மருத்துவர் மற்றும் யோகா நிபுணர்
· கைகளைக் கழுவாமல் சாப்பிடக் கூடாது; சமைக்கக் கூடாது.
· தண்ணீரில் கழுவாமல் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடக் கூடாது.
· பதப்படுத்தி, டின்னில் பாதுகாத்த பொருள்களை சாப்பிடாமல், புதிதாக சமைத்தவற்றை சாப்பிடவும்.
· சிறுநீரை அடக்கக் கூடாது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் உடனே கழித்து விட வேண்டும்.
· அதிக எடையுள்ள பொருள்களை தூக்கக் கூடாது.
· உடைகள் தளர்த்தியாகவும், பருத்தியால் ஆனதாகவும் இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது.
· உயர்ந்த குதிகால் உள்ள காலணிகளை அணியக் கூடாது.
· காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.
· உட்கார்ந்த நிலையில் இருந்து, படுத்த நிலையில் இருந்து வேகமாக எழுந்து கொள்வதோ, உடனே நடப்பதோ கூடாது.
· நீண்ட நேரம் நிற்கக் கூடாது.
· ஒருமணி நேரத்திற்கு மேல் ஒரே மாதிரி உட்காரக் கூடாது.
· மல்லாந்தும், வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதும் கூடாது.
· நீண்ட தூரப் பயணங்கள் கூடாது.
· வெளியில் தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
· கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குப் போகக் கூடாது.
· கண்ட கண்ட மாத்திரைகளை சுயமாக கடையில் வாங்கிச் சாப்பிடக் கூடாது.
· திகில் காட்சிகள் கொண்ட திரைப்படங்களை பார்க்கக் கூடாது.
· அதிக இரைச்சலை தவிர்க்க வேண்டும்.
· அதிக உப்பு, மசாலா, எண்ணெய் அதிகம் உள்ள பொரித்த, கிழங்கு வகைகளை சாப்பிடக் கூடாது.
· பட்டினி கிடப்பதோ, உண்ணாவிரதம் இருப்பதோ, விரதம் இருப்பதோ கூடாது.
· எந்த வேலையையும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கக் கூடாது. இடைவெளி விட்டுவிட்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
· கோபப்படக் கூடாது. வருத்தமோ, கவலையோ படக்கூடாது. யாருடனும் சண்டை போடக் கூடாது.
· நிற்கும்போதும், நடக்கும்போதும் முதுகைப் பின்னால் தள்ளாமல் நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
· கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது.
· ரசாயனப் பொருள்கள் கலந்த முக அழகுப் பொருள்கள், தலைச்சாயம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
· உடலை வருத்தி உடற்பயிற்சி செய்யக் கூடாது.
· எதிலும் அவசரம், பதற்றம் கூடாது.
· காற்றோட்டம் இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது.
· மருத்துவர் பரிந்துரை இல்லாமல், எக்ஸ் ரே எடுக்கவே கூடாது.
· அதிக நேரம், அதிக சூடான நீரில் குளிக்கக் கூடாது. மிதமான சூட்டில்தான் குளிக்க வேண்டும்.
· காய்ச்சல் வந்தால் அப்படியே விடக்கூடாது. உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
· அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களை உயரமான இடத்தில் வைக்கக் கூடாது. அதை எட்டி எடுப்பதோ, உயரமான ஸ்டூலில் ஏறி எடுப்பதோ கூடாது.
· ஆட்டோவில் போகும்போது பின்னால் சாய்ந்து உட்காரக் கூடாது. முன்பக்கம் நகர்ந்து நேராக உட்கார்ந்து இரண்டு கைகளாலும் கம்பியை பிடித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆட்டோவின் குலுக்கல் பாதிக்காது.
· காரில் போகும்போது பின் சீட்டில் உட்காரவும். பெல்ட் போட்டுக் கொள்ளவும்.
· மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் கடைபிடியுங்கள்.
மேலும், ஒரு கர்ப்பிணியின் வயிறு இன்னொரு கர்ப்பிணியின் வயிறுபோல் இருக்காது. ஓருபோதும் இன்னொரு கர்ப்பிணியோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மருத்துவர் சொல்வதை மட்டும் தவறாமல் கடைபிடித்தாலே போதும். பிரசவம் எளிதாக நடைபெறும். அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

