புற்றுநோய் சிகிச்சையில் பல்வேறு புதிய தொழில்நுட்ப சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்(Apollo Proton Cancer Centre),குரல் மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கான சிகிச்சைக்குப் பிந்தைய மறுவாழ்வுத் திட்டமான விரிவான குரல்,சுவாசப்பாதை மற்றும் விழுங்குதல் சிகிச்சை மையம் Comprehensive Voice, Airway,and Swallow Clinic (C-VASC) என்ற புதிய மையத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த முன்முயற்சி, தலை மற்றும் கழுத்து புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு பேசுவதிலும், விழுங்குவதிலும் அல்லது சுவாசிப்பதிலும் சிரமத்தை எதிர்கொள்ளும் நபர்களுக்குத் தேவையான பிந்தைய பராமரிப்பு ஆதரவை வழங்குகிறது. இம்மையம் நோயாளிகளின் குணமடைதல், மறுவாழ்வு, அவர்களின் தன்னம்பிக்கை, ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

இந்தியாவில் 14 இலட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகின்றன, இதில் பெரும்பாலான பாதிப்புகள் புகையிலை, புகைபிடித்தல், புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்களுடன் தொடர்புடையவை. குறிப்பாக கழுத்து மற்றும் தலை புற்றுநோய்களே இதில் அதிகம்.தலை மற்றும் கழுத்து புற்றுநோயிலிருந்து மீண்டு பிழைத்தவர்கள் பலருக்கு மெல்லுதல்,பேசுதல், சுவாசித்தல் ஆகியவற்றில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர், மேலும் இதற்கான பிந்தைய பராமரிப்பு சிகிச்சை தகவல்களும் வசதிகளும் இன்னமும் பற்றாக்குறையாகவே உள்ளன.

இந்தியாவில் குரல் தொடர்பான குறைபாடுகள் பெரும்பாலும் அலட்சியம் செய்யப்படுகின்றன. ஆனால் அவை உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி, தனிமனிதரை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த வழிவகுக்கும் என்பதே உண்மை. காது,மூக்கு, தொண்டை நிபுணர்கள், புற்றுநோய் நிபுணர்கள்,பேச்சுப் பயிற்சியாளர்கள், விழுங்குதல் குறைபாட்டு வல்லுநர்கள், உணவுமுறை நிபுணர்கள், நுரையீரல் மறுவாழ்வு நிபுணர்கள் ஆகியோரை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

டாக்டர் சப்னா நங்கியா,டாக்டர் நவீன் ஹெத்னே ஆகியோர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பற்றிய விவரங்களை செய்தியாளர் மத்தியில் விவரித்தார்கள்.

புற்றுநோய் சிகிச்சையில் இது ஒரு சாதனை என்று குறிப்பிடலாம். மருத்துவர்களுக்கு நமது இதில் சார்பில் வாழ்த்துக்கள்.

-ஷைலஜா.