னித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு இணையதளம். எதைத் தேடியும் எங்கும் ஓடத் தேவையில்லை. சிரமப்பட வேண்டியதில்லை. இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும்.

சாதகங்கள் ஆயிரம் இருந்தாலும் அதே அளவுக்கு பாதகங்களும் உள்ளன.

நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவது அந்தக் காலம். செல்போன் கொடுத்து குழந்தைகளை கெடுப்பது இந்தக் காலம்.இரண்டு வயதில் இரண்டு வார்த்தை பேசுகிறதோ இல்லையோ…2000 ரிலீஸ் பார்க்கிறது பச்சிளம் குழந்தை.

அப்பா,அம்மா பேசுவதை கேட்பது அரிது.ஓடி,ஆடி விளையாட வாய்ப்பு இல்லை.உட்கார்ந்த இடத்திலேயே மணிக்கணக்கில் செல்போன் பார்க்கலாம். இதனால் பச்சிளம் குழந்தைக்கு பார்வைக் கோளாறு,தலைவலி, தூக்கம் இல்லை.

அச்சிட்ட புத்தகங்களை படிக்க வாய்ப்பு இல்லை.படிக்கும் ஆர்வம் குறைகிறது.அளவுக்கு அதிகமான ஸ்க்ரீன் டைம் காரணத்தால் வழக்கமான அன்றாட பணிகள் பாதிப்பு, படிப்பு பாழாவது, உரையாடல் இல்லை, விளையாட நேரமில்லை, சாப்பிடக் கூட ஆர்வம் இல்லை,மொழி வளர்ச்சி இல்லை.

மொத்தத்தில் குழந்தைத்தனம் இல்லாமல் எந்திரத் தன்மைக்கு மாறி சோஷியல் மீடியா போதைக்கு அடிமையாகி விட்டார்கள்.

இதிலிருந்து மீளவே முடியாதா… என்று உலகமே கவலையோடு இருந்த நேரத்தில், ஆஸ்திரேலியா அரசாங்கம் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சோஷியல் மீடியாவை பயன்படுத்த தடை விதித்திருக்கிறது.
இளம் சிறார்கள் சோஷியல் மீடியாவில் இடம்பெறுவது கட்டுப்படுத்தப்படுகிறது.தடை செய்கிறார்கள்.இது வரவேற்கத்தக்க முடிவு.நமது மத்திய, மாநில அரசுகள் ஆஸ்திரேலியா அரசாங்கத்தைப் போல் துணிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளோடு மனம் விட்டு பேசுங்கள்; உரையாடுங்கள். அவர்களோடு தினமும் விளையாடுங்கள்.
வெளியில் அழைத்துச் சென்று பரந்த உலகத்தை அறிமுகம் செய்யுங்கள். செல்போன் கொடுத்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள். செல்போன், கம்யூட்டர் கேம்,இணையதள அடிமைத்தனத்தை கட்டுப்படுத்துங்கள். குழந்தைகளை நல்லவர்களாக, ஆரோக்கியம் உள்ளவர்களாக, வளர்த்தெடுப்பது நமது கடமை.