யுர்வேதம் என்பது தேவரகசியமோ அல்லது மிகப்பெரிய மருத்துவ சூட்சுமமோ இல்லை.உடல் – மனம் – உணவு – இயற்கை… ஆகியவற்றை சமநிலையில் வைத்திருக்கும் வாழ்வியல் முறையாகும். ஆயுர்வேத முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெறலாம்.

மனித உடலை முக்கிய மூன்றுத் தன்மைகளாகப் ஆயுர்வேதம் பார்க்கிறது.

வாதம் (Vata) – இயக்கம்
பித்தம் (Pitta) – வெப்பம் / ஜீரணம்
கபம் (Kapha) – நிலைத்தன்மை.

இந்த மூன்றையும் சமநிலையில் வைத்திருக்கும் வழிமுறைகளை ஆயுர்வேதத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

அதிகாலை துயிலெழுதல்!

சூர்ய உதயத்திற்கு முன்(காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில்) துயிலெழுவது உடலுக்கும் மனதுக்கும் அமைதி மற்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வெந்நீர் ரகசியம்

காலையில் மிதமான வெந்நீர் குடிப்பதை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. இது ஜீரணத்தன்மையை தூண்டி உடல் நச்சுகளை வெளியேற்றுகிறது. தொண்டை மற்றும் குடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.

எண்ணெய் காப்பு

காலையில், சுத்தமான நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 3 முதல் 5 நிமிடங்கள் கொப்பளித்து துப்புவது பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஈறுகளின் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. நாக்கும் சுத்தமாகி வாய்புற நச்சுகளை வெளியேற்றி, செரிமான சக்தியை தூண்டுகிறது.

எண்ணெய் மசாஜ்

குளிப்பதற்கு முன் மிதமாக சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைக் கொண்டு உடலை மசாஜ் செய்வது சருமத்தை மென்மையாக்குகிறது.ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

உணவே மருந்து

சரியான உணவு தான் முதல் மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
நல்ல உணவுப் பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.பசித்தபின் உண்பது என்பது பாதி நோய்கள் வராமல் தடுக்கும் யுக்தியாகும். அளவோடு உண்பது ஆரோக்கியத்திற்கான அடித்தளம் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. .

மதிய உணவை பசி எடுக்கும்போது, அதாவது சூரியன் உச்சத்தில் இருக்கும்போது (12 மணி முதல் 1 மணி வரை) சாப்பிடுவது சிறந்தது.
இரவு உணவு மிதமாக 7 மணிக்கு முன்னதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சமைத்த உடன் சூடாக உணவுகளை உட்கொள்ள வேண்டும். குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ஆறு மனமே ஆறு

உணவில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, காரம் மற்றும் துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் சீரான அளவில் இருக்க வேண்டும். உணவை ரசித்து, மென்று, அமைதியான சூழலில் உண்ண வேண்டும்.

ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள்

கம்பு,கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், காய்கறி,பழங்கள், இயற்கை உணவுகள், அத்துடன் உணவில் இஞ்சி,மஞ்சள், சீரகம்,மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

கிருமிகள் ஒழிப்புக்கு மஞ்சள், ஜீரணத்திற்கு இஞ்சி,
சளி,இருமலுக்கு துளசி,உடல் வெப்பத்திற்கு மிளகு,உள்ளிட்ட பல்வேறு ஆயுர்வேத மகத்துவ பொருட்கள் நம் சமையலறையில் மட்டுமின்றி நம் தோட்டங்களிலும் உள்ளன.

உடற்பயிற்சி

ஆயுர்வேதம் முக்கியமாக உடல் இயக்கத்தை வலியுறுத்துகிறது.
தினமும் நடைப்பயிற்சி அவசியத்தை வலியுறுத்துகிறது..இவற்றுடன் யோகா, சுவாசப் பயிற்சி ஆகியன மேம்படுத்தப்பட்ட நலமான வாழ்வை அமைத்துத் தரும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இலக்கை நோக்கி உழைக்கும் திறனை, படைப்பாற்றலை அதிகரிக்கும்.
மன அழுத்தமின்றி உள்புற வெளிப்புற சூழல்களை அமைதியாக வைத்திருக்கும்.

நல்ல தூக்கம்

ஒவ்வொரு மனிதருக்கும் நேரத்திற்கு தூக்கம் அவசியம் என்பது ஆயுர்வேதத்தின் முக்கிய கோட்பாடு. போதுமான தூக்கம் உடலை புதுப்பிக்கும். இப்போதெல்லாம் கைபேசிகளே தூங்க வைக்கின்றன. அடுத்த நாள் காலை தாமதமாகவே விடிகிறது.இது பெரும் ஆபத்தாக மாறிவருகிறது.

மனவளக்கலை

ஆயுர்வேதம் ஒவ்வொரு மனிதரின் மனதையும் ஆராதிக்கிறது. மனம் நலமுடன் இருந்தால் உடல் நலமுடன் இருக்கும் என்று வலியுறுத்துகிறது. எனவே ஆயுர்வேதத்தின் வழிகாட்டலை முழுமையாக பின்பற்ற வேண்டும். கோபத்தை குறைப்பது நல்லது.
அமைதியாக பேசுவதும் பிறர் பேசுவதை கேட்பதும் இயற்கையோடு தோழமை கொள்வதும் மன வளங்களை அதிகரிக்கும்.

தகவல் தொடர்புக்கு:

தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்,
எண்11,பாரதிதாசன் தெரு,பிள்ளையார் கோவில் எதிரில், மஞ்சக்குப்பம், கடலூர் -607 001.
Mail acudrravi@gmail.com.
9367622256