
நல்ல உணவு என்பது பசியாற்றுவது மட்டுமல்ல. உடலுக்கு தேவையான எல்லாவித சத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
சாலையோர உணவுக் கடைகளில் பெரும்பாலும் வெரைட்டி ரைஸ் தான் விற்பனையாகிறது. தொட்டுக்க பழைய ஊறுகாய் தருவார்கள்.
நம்முடைய ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான காரணிகளில் வெரைட்டி ரைஸும் இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கோ, அலுவலகத்துக்கு மதிய உணவாகக் கொண்டு செல்லவோ வெரைட்டி ரைஸ் சமைப்பதற்கு எளிதாக இருக்கிறது. தக்காளி சாதம், புளியோதரை, லெமன் ரைஸ்தான் பலருக்கு மதிய உணவாகவும் இருக்கிறது. எப்போதாவது வெரைட்டி ரைஸ் சாப்பிடுவதில் தவறு இல்லை.ஆனால், அதையே வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம். அவற்றில் எண்ணெய் அதிகம். காய்கறி இல்லை. புரதச்சத்தும் கிடையாது. அப்படியே கூட்டாகச் சேர்த்தாலும் பெரும்பாலும் வறுத்த உருளைக்கிழங்குதான் சைடிஷ்ஷாக இருக்கிறது.
சிலர் சிப்ஸ்,வடை, பக்கோடா போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு வரும். எனவே,வெரைட்டி ரைஸை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். அப்படி வெரைட்டி ரைஸ் செய்தால், காய்கறிகள் நிறைந்த ஒரு கூட்டை சைடிஷ்ஷாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

