
– பேராசிரியர் டாக்டர் ஆதிஜோதிபாபு பேட்டி
சேலத்தில் அக்குபஞ்சர் மருத்துவராக சிகிச்சை அளித்து வந்த பேராசிரியர் ஆதிஜோதிபாபு சென்னையிலும் சிகிச்சை அளித்து வருகிறார். இவர் தனது மேற்படிப்பிற்காக பஞ்ச பூத நாடி பரிசோதனை ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.அக்குபஞ்சர் மருத்துவத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர்.புதிய சுழற்சி முறைகளையும்,சக்தி ஓட்ட பாதைகளையும், பஞ்சபூத புள்ளிகளையும் கண்டுபிடித்துள்ளார். மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் நோய்களை தீர்க்க முடியும் என்கிறார்…
*பஞ்ச பூத மருத்துவத்தின் சிறப்பு என்ன?
இந்த பிரபஞ்சமும், அதில் உள்ள சகலமும் பஞ்ச பூதங்களினால் ஆனது. இந்த கண்ணுக்குப் புலப்படாத சக்திகளே,இந்த பிரபஞ்சத்தின்,உலகின் சகலவிதமான தோற்றத்திற்கும், வாழ்விற்கும், அழிவிற்கும் காரணம். இந்த மருத்துவமானது அந்த கண்ணுக்குப் புலப்படாத பஞ்ச பூத சக்திகளை நாடிகள் மூலம் தொட்டு உணர்வதால் இந்த மருத்துவமே சிறந்த மருத்துவமாகும். மருத்துவ பரிசோதனைகளோ, உடற்பயிற்சிகளோ, கடுமையான பத்திய முறைகளோ,மருந்து, மாத்திரை,ஊசிகளோ இல்லை என்பது இந்த மருத்துவத்தின் முக்கிய அம்சமாகும்.
*மருந்து,மாத்திரை,ஊசி இல்லாமல் எவ்வாறு நோய்கள் குணமாகும்?
நாம் சுவாசிக்கும் சுவாசம்,உண்ணும் உணவு,இருப்பிடம், உடை போன்ற அனைத்தும் இந்த பிரபஞ்சத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பஞ்ச பூதங்களுடனும்,அதன் உருவ நிலைகளான திட திரவ,வாயு நிலைகளாலும் ஆனது. மேலும் பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தின் தோற்றத்திற்கும், வாழ்விற்கும். மறைவிற்கும் காரணமாக உள்ளது. எனவே,பஞ்ச பூதங்களாலேயே சகலமும் உருவாக்கப்பட்டதால், மருந்து,மாத்திரை,ஊசி அனைத்தும் அதன் வடிவங்களே.மேலும் இவை ஒரு குறிப்பிட்ட அளவே வேலை செய்யும்.நாம் சுவாசிக்கும் சுவாசம் எந்த மருந்து, மாத்திரையாலும் உருவாக்கப்பட்டது இல்லை.எனவே மருந்து, மாத்திரை, ஊசி இல்லாமலும் நோய்கள் நிச்சயம் குணமாகும். காரணம் நமது உடலானது பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடையதாகவும் உள்ளது.எனவே பஞ்ச பூதங்களின் மூலம் வியாதிகளை குணப்படுத்தலாம். அதாவது பஞ்ச பூத சக்திகளின் மிகுதி, குறைவே நோய்களாகவும், நோய்களுக்கு மருந்துகளாக அவற்றின் மிகுதி,குறைவை கண்டுபிடித்து சமநிலைப்படுத்துவதுமாகும்.
*பஞ்ச பூத மருத்துவத்தில் இவ்வளவு சிறப்பு இருப்பதால் மற்ற எந்த மருத்துவ முறைகளும், பரிசோதனை முறைகளும் தேவை இல்லையா?
பஞ்சபூத மருத்துவத்தில் உள்ள சிறப்புகள் என்பது அந்த மருத்துவமுறையில் உள்ள உண்மை நிலைகள் மட்டுமே தவிர, மற்ற மருத்துவ முறைகளைக் குறை கூறுவதோ,மருத்துவ முறைகளும், பரிசோதனை முறைகளும் தவறு என்றோ,தேவை இல்லை என்றோ கூறுவது கிடையாது.காரணம் இந்த மருத்துவத்தைப் பொறுத்த வரையிலும் வியாதிகளை சரி செய்வது மட்டுமே நோக்கமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
மேலும் ஒருவர் வருடக் கணக்கில் மருந்து, மாத்திரை, ஊசி போன்றவற்றை உபயோகிக்கும் போது அவரது உடல், மனம் உயிர் போன்ற அனைத்திலும் ஒருவிதமான சலிப்பும், ஏன் வாழ்கின்றோம், இந்த வியாதிகளுக்கு தீர்வே இல்லையா? என்ற கேள்வியும் நிச்சயமாக இருக்கும். இது போன்ற அனைத்து விதமான கேள்விகளிலிருந்தும் ஒருவர் விடுபடவேண்டுமென்றால் அவருக்கு வியாதி குறைய வேண்டும். அப்பொழுது தான் மருந்து,மாத்திரை,ஊசி போன்றவற்றை குறைக்க முடியும். எனவே வியாதிகளைக் குறைத்து முதலில் மருந்துகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை தருவதும், பின்னர் வியாதியில் இருந்து விடுபட்ட பின்னர் 3- 6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பரிசோதனையோ அல்லது மருத்துவமோ பார்த்துக் கொள்வது போன்ற நிலைக்கு நோயாளியைக் கொண்டு செல்வதுமே இந்த பஞ்ச பூத மருத்துவ முறையின் நோக்கமாகும்.
*எந்தெந்த நோய்களுக்கு பஞ்ச பூத மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க முடியும்?
உடல்,மனம், உயிர் சார்ந்த சகலவிதமான நோய்களுக்கும்,நாள் பட்ட தீர்க்க முடியாத, குணமாகாது என்று கைவிடப்பட்ட, கரணம்தெரியாத நோய்களுக்கும் பஞ்ச பூத மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க முடியும்.
*”யோகா,வாக்கிங். உடற்பயிற்சி,உணவு முறை,பத்தியங்கள் இருந்தாலே வியாதிகள் சரியாகிவிடும் என்ற எண்ணம் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக உள்ளதே இது சரியா ? நோய்கள் குணமாகுமா?
யோகா,வாக்கிங், உடற்பயிற்சி,உணவு முறை,பத்தியங்கள் அனைத்துமே நோயின் தீவிரத்தை ஓரளவு கட்டுப்படுத்துமே தவிர நோயை குணப்படுத்தாது.மேலும் குறுகிய கால நோயைக் குணப்படுத்தவும்,நோய் வருவதைத் தடுக்கவும், தள்ளிப் போடவும் உதவும்.
*வெறும் வயிற்றில். காலை நேரத்தில் நாடி பார்த்து வைத்தியம் செய்வது தான் சிறந்தது என்று அக்குபஞ்சர், அக்கு பிரஷர் மற்றும் பல மருத்துவ முறைகள் கூறுகின்றன.பஞ்ச பூத மருத்துவத்தில் எப்படி ? உண்மை நிலை என்ன?
அதிகாலை,வெறும் வயிற்றில் நாடி பார்த்தால் நாடி துல்லியமாக தெரியும். (மற்றும் வாத நாடி அந்த நேரத்தில் மிக அதிகமாக வேலை செய்யும்) என்ற நிலையினால் மட்டுமே அதிகாலையில் வெறும் வயிற்றில் நாடி பார்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால்,பஞ்ச பூத மருத்துவத்தைப் பொறுத்தவரை எந்த நேரத்திலும் நாடி பார்க்கலாம்.காரணம் நாள்பட்ட நோய்களில், கடுமையான நோய்களில் நாடிகள் எந்த நேரத்திலும் மாறுவதில்லை.மேலும், அனைத்துவிதமான வியாதிகளும் கால சுழற்சியுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் பல வியாதிகள் ஒரு சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெளிப்படும். குறிப்பாக காலை எழுந்திருக்கும் சமயம், சாப்பிடும் சமயம், உட்காரும்சமயம்,நிற்கும் சமயம்,நடக்கும் சமயம், ஓடும் சமயம்,படுக்கும் சமயம்,தூங்கும் சமயம், அதிக வேலை செய்யும் சமயம்,அதிகமாக கண் விழிக்கும் சமயம், இன்னும் பல.
*அக்குபஞ்சர், அக்குபிரஷர், வர்மா போன்ற சிகிச்சை எடுத்துக்கொண்டால் நரம்பு தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டா?பஞ்ச பூத சிகிச்சை எப்படி?
அப்படி ஏதும் நிச்சயமாக இல்லை. காரணம் அக்குபஞ்சர், அக்குபிரஷர்,பஞ்சபூத மருத்துவம் ஏதும் நரம்புகளுடன் தொடர்பு கொண்டுள்ள மருத்துவ முறைகள் அல்ல.வர்ம கலை மட்டுமே நரம்புகளுடன் தொடர்பு கொண்ட மருத்துவம், இந்த மருத்துவ முறைகள் எவற்றாலும் சிறுநீரகக் கோளாறுகள் உருவாக வாய்ப்புகள் இல்லை.பஞ்சபூத மருத்துவத்தைப் பொறுத்த வரை நோயாளிகள் கூறும் நோய்கள் அனைத்தும் பஞ்ச பூத நாடி பரிசோதனை முறையில் நாடி பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே,அதாவது நோய் உடல் ரீதியானதா மனோ ரீதியானதா, உயிர் ரீதியானதா, நாள்பட்டதா,குறுகிய கால நோயா,வேறு ஏதும் நோய்கள் உள்ளனவா பேன்றவற்றை பஞ்ச பூத நாடிகள் மூலம் உணரப்பட்ட பின்னரே மருத்துவம் பார்க்கப்படும்.அதாவது நோயாளி கூறும் வார்த்தைகளை மட்டுமே கொண்டு மருத்துவம் பார்ப்பதில்லை.மேலும் வியாதி உருவானது பழக்க வழக்கத்தாலா, உணவு முறைகளாலா, கடுமையான உடற்பயிற்சி போன்றவற்றாலா, செக்ஸ் பிரச்சனைகளாலா, அதிகப்படியான, குறைவான தூக்கத்தாலா போன்ற சகல விதத்திலும் உள்ள நிலைகளையும் கண்டறிந்து வியாதிகளைக் குணப்படுத்த பஞ்ச பூத மருத்துவ முறை பயன்படுகிறது.எனவே, பக்க விளைவுகள் என்ற பேச்சிற்கே இதில் இடம் இல்லை.
*அவசர கால சிகிச்சை முறைக்கு ஆங்கில மருத்துவ முறை மட்டுமே பயன்படும் என்ற நிலை உள்ளதே ? பஞ்ச பூத மருத்துவத்தை அவசர கால சிகிச்சை செய்ய பயன்படுத்த முடியுமா?
தாராளமாக சிகிச்சை அளிக்க முடியும். உதாரணமாக இருதய அடைப்பு ஏற்படுகிறது. முதல் நிலை சிகிச்சை என்பது இருதயத்தின் பகுதியை அழுத்தி மசாஜ் செய்வதும், வாயின் வழியாக சுவாசத்தை செலுத்துவதும்,கரண்ட் ஷாக் கொடுப்பதும் உண்டு.இதன் பிறகே அடைப்பை போக்க மருந்து கொடுப்பது, ஆக்சிஜன் தருவது போன்ற நிலைகளும். பஞ்ச பூத மருத்துவத்தில் இருதய அடைப்பிற்கான நாடியை துல்லியமாக கண்டறிந்து வைத்தியம் செய்ய முடியும். பக்கவாதத்தில் கை, கால் வராமல் போகும் நிலையிலும் சிகிச்சையளித்து குணமடைய செய்ய முடியும்.ஆக்ஸிடெண்ட் கேசில் அதிகப்படியாக இரத்தப் போக்கை ஊசி போட்டு தடுக்க முடியவில்லை என்றாலும் இந்த மருத்துவத்தின் மூலம் தடுக்க முடியும்.
எலும்பு முறிவு போன்றவற்றில் கட்டுப் போட்டும், ஆப்பரேஷன் செய்தும் எலும்பு கூடாத நிலையில் உள்ளவர்களுக்கு எலும்பை கூட வைக்க முடியும்.குறிப்பாக கோமா நிலையில் உள்ளவர்களை விழிக்க வைக்கவும்,உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு (மருந்து எடுத்தும் குணம் தெரியாத அனைவருக்கும்) உதவி செய்ய முடியும்.இந்த மருத்துவத்தை ஆங்கில மருத்துவர்களும் கற்பார்களேயானால் நோயாளிகளுக்குப் பல வகையில் உதவி செய்ய முடியும். பிஸியோதெரபியைத் தங்கள் மருத்துவத்துடன் இணைத்திருக்கும் ஆங்கில மருத்துவம், இந்த பஞ்ச பூத மருத்துவ முறையையும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இணைக்குமானால் உலகில் பரவியிருக்கும் பல கொடிய நோய்களின் தாக்கத்திலிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களை அவர்களின் நோய்களிலிருந்து விடுதலை செய்யலாம் என்றார் பேராசிரியர் டாக்டர் ஆதிஜோதி பாபு.
சந்திப்பு:அருள் வேல்.

