-டாக்டர் ஜி. ராஜமோகன்.

ருந்தியல் என்று சொல்லக்கூடிய பார்மசி என்பது சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. மருந்துகளை கையாளுவதில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வு மாணவர்களுக்கு இங்கு தான் கற்றுத் தரப்படுகிறது.

ஜே.கே.கே. முனிராஜா கல்விக் குழுமம் 34 ஆண்டுகளாக மருந்தியல் மாணவர்களை உருவாக்கி வருகிறது.

கடந்த 14.03.2026 அன்று ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்காவில் உள்ள டி.என்.பாளையத்தில் நடைபெற்ற கல்லூரி நாள் நிகழ்வில்,தி சுசானலி குழுமத்தின் தலைவரும்,வீ ஹெர்பல் கேர்(பி) லிட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தலைவர் திருமதி.வசந்தகுமாரி முனிராஜ், முனைவர், ஆராய்ச்சி துறை இயக்குநர் டாக்டர்.கிருபாகர் முரளி, செயலாளர் திருமதி கஸ்துாரிபிரியா, கல்லூரியின் முதலவர் டாக்டர் ஸ்ரீதரன் ,பேராசிரியர் முதல்வர் பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வீ ஹெர்பல் கேர்(பி) லிட் நிறுவனத்தின் மூலமாக இணைந்து ஆக்கப்பூர்வமாக பல்வேறு பணிகளை செய்வது என்று விழா நிகழ்வில் உறுதிபடுத்தப்பட்டது.

சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவியின் வேண்டுகோள் மற்றும் ஆலோசனைப்படி விரைவில் ஜே.கே.கே. கல்விக் குழுமம் மருத்துவ கல்லூரியை துவங்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

மருந்தியல் மாணவர்கள் சாதனைகளை பாராட்டி வாழ்த்தி பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

மருத்துவ அறிவியலை கற்பவர்களுக்கு ஊக்கம் தருவது கல்வி நிறுவனங்களின் கடமையாகும்.டாக்டர் சி.ஏ.ரவி அவர்களும் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார். கடந்த 10 ஆண்டுகளாக காலேஜ் பார்மசி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது போன்ற கல்வி நிறுவனங்களில் பங்களிப்பு தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியம்.

மருத்துவ அறிவியல் கல்வி பாமரர்களுக்கும் கிடைக்க வேண்டும். பட்டிதொட்டி எல்லாம் பரவ வேண்டும். நமது இதழ் சார்பில் பாராட்டி வாழ்த்துகிறோம்.