பேராசிரியர் டாக்டர் உஷா ரவி, BNYS., MD(Acu) Ph. D
டாக்டர் சி. ஏ. ரவி, குறு, சிறு மற்றும் மூலிகை, அக்குபஞ்சர் ஆய்வாளர்
 
கங்கள் ஒருவரின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என சித்தா ஆயுர்வேதிக் மருத்துவத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. 
 
உலக விஷயங்களை உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கும் நமக்கு நம்முடைய விரல் நகங்களை பற்றி ஓரளவிற்காகவாவது தெரிந்து வைத்திருப்பது நல்லது. நகம் விரல்களுக்கு கவசம் போன்றது. விரலின் முனைகளைப் பாதுகாப்பதுதான் நகங்களின் பணி. நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதி நகம். ஆல்ஃபா கெரட்டின் என்னும் புரதப் பொருள் நகத்தை உருவாக்குகிறது. மேற்புறத்தில் பளிச்சென்று வழுவழுப்பாக இருக்கும் பாகமே நகத்தின் உறுதியான பாகம். இதில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இல்லை. 
 
வெளிநகத்துக்கு அடியில் உள்ள நகத் தளத்தில் திசுக்களால் ஆன ரத்த ஓட்டப்
படுக்கை நகத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இந்த நகத்தளத்தைத்
தாண்டி வளரும் நகப்பகுதியை அடிக்கடி நாம் வேண்டாம்
என்று நறுக்கிவிடுகிறோம். இது இறந்த நகப்பகுதி. இந்தப் பகுதியை வெட்டும்போது எந்த
வலியும் ஏற்படுவதில்லை.
 
நகமும் சதையும் சேரும் இடத்தில், சதைக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர். இந்தப் பகுதியில்தான் நகம் முளைக்கும் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இருப்பதால் இப்பகுதியை அழுத்தினால் வலி உண்டாகும். 
 
அகம்சொல்லும் நகம்
 
 உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறதா…இல்லையா? என்பதை நகத்தைப் பார்த்தே சொல்லி விடலாம். எல்லோருக்கும் நகங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பலருக்கு நகங்கள் சரியாக வளர்வதில்லை. 
 
கைவிரல் நகங்கள் மிகவும் வெண்மையாகவும், ஸ்பூன் போன்று குழி விழுந்தும் இருந்தால் இரும்புச்சத்து குறைபாட்டை உறுதி செய்யலாம். இதயக் கோளாறுகள். நுரையீரல் கோளாறுகள், குடல் நோய்,கல்லீரல் நோய், பிறவிக் கோளாறு,இதய உறை அழற்சி நோய்,புற்றுநோய் செரிமானக் கோளாறு,போன்ற நோய்கள் இருந்தால் கைவிரல் நகங்கள் வீங்கி காணப்படும். 
 
நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலும் கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் இருந்தால்
சிரோசிஸ் என அழைக்கப்படுகிறது. கல்லீரல் நோய் மற்றும் இதயச் செயலிழப்பு
நோய்களை இவற்றின் மூலம் அறியலாம். 
 
 சிவப்புப் புள்ளிகள், நீல நிறம், மஞ்சள், கறுப்புக்கோடுகள் பார்த்து நோய்களை கண்டுபிடிக்கலாம். 
 
காலசியம், வைட்டமின், புரதம், இரும்புச்சத்து போன்ற வைட்டமின் குறைபாடுகளாலும் நகத்தின் குறுக்கே வெள்ளைக்கோடுகள் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும். நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால் வாயு தொல்லை அதிகமாக இருபத்தற்கான அறிகுறிகளாகும். 
 
விரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருந்தால் உடல் நலம் குன்றி இருப்பதற்கான
அடையாளமாகும். உடலில் போதிய இரத்தம் இல்லையென்றால் கை விரல் நகங்கள்
வெளுத்துப்போய் காணப்படும்.விரல் நகங்கள் மஞ்சள் நிறத்தில் தென்பட்டால்
இரத்தத்தில் நிக்கோடின் விஷம் கலந்திருப்பதிற்கான அறிகுறியாகும்.
 
நகங்கள் சற்று உப்பி காணப்பட்டால் மூச்சு சம்மந்தமான நோய்கள் மற்றும் ஆஸ்துமா வருவதற்க்கான வாய்ப்புகள் உண்டு. விரல் நகங்கள் சற்று நீல நிறமாக தென்படடால் இதயம் பலவீனமாக இருப்பதற்கு அடையாளமாகும். நகங்கள் மிகவும் சிவப்பாக இருந்தால் உடலில் இரத்தத்தின் அளவு சற்றே அதிகமாக இருப்பதை காட்டுகிறது. இவர்களுக்கு இரத்த கொதிப்பு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. நகங்களில் சொத்தைகள் காணப்பட்டால்  போதிய ஊட்ட சத்து இலை என்று தெரிந்துகொள்ளலாம்.
 
ஆரோக்கியமான நகங்களுக்கு…
 
அடிக்கடி விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கழுவிய பின்னர் ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும். நகம் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.கடிக்கும் பழக்கம் இருந்தால் நகத்தில் உள்ள கிருமிகள் வாய்க்கும் வாயில் உள்ள கிருமிகள் நகத்துக்கும் செல்லும். 
 
கெமிக்கலைப் பயன்படுத்தும்போது தகுந்த கையுறைகளை அணியவேண்டும். நகப்பூச்சு பயன்படுத்துபவர்கள் அடிக்கடி பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். வறண்ட நகம் கொண்டவர்கள் பாலிஷுக்குப் பதிலாக மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தலாம். பாட்டில் மூடி, டப்பாக்களைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்த வேண்டாம்.நீளமாக நகம் வளர்ப்பதைத் தவிரக்க வேண்டும். இது பல காயங்களுக்கு வழிவகுக்கும். சரியான அளவு ஷு, செருப்பைப் பயனபடுத்த வேண்டும். நகவெட்டியைக் கொண்டு நகங்களை வெட்டலாம். பிளேடு, கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றைக் கொண்டு நகம் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். 
 
இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பூ ,இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. நகங்களை பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் தாக்காமல் பார்த்துக் கொள்ளவது முக்கியம். 
 
 தினமும் குளிப்பதற்கு முன், மஞ்சள் பொடியை ஆலிவ் எண்ணெயில் கலந்து நகங்களில் தடவி மசாஜ் செய்யுங்கள்.ஐந்து நிமிடங்கள் கழித்து குளிக்கச் செல்லலாம். நகங்களில் ஏற்படும் தொற்றை இது எதிர்க்கும்.  எலுமிச்சை சாறினை ஒரு பஞ்சினால் எடுத்து, அதனை நகங்களில் பூசி வந்தால், பூஞ்சை தொற்று மற்றும் அழுக்குகள் நீங்கும்.
 
கால்சியம் சத்துக்கள் முழுமையாக பெற தினமும் காலையிலும் மாலையிலும் பால் குடிப்பது நல்லது.விட்டமின்ஸ் போன்ற சத்துகள் நக வலுவுக்கு மிக அவசியம். 
கீரை, காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.விட்டமின் ஏ மற்றும் பயோட்டீன்(விட்டமின் பி)
நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நகங்களுக்கு பலத்தை கொடுக்கும்.கேரட், பீட்ரூட போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பெர்ரி குடும்பத்தை சேர்த்த ஸ்டராபெர்ரி,ப்ளூ பெர்ரி, திராட்சை போன்ற பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சியா விதைகள் சம்சா விதைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான நகங்கள் கிடைக்க இவை துணை புரியும். பாதாம் எண்ணெயை இரண்டு சொட்டு நகத்தில் தேய்த்து வந்தால் இயற்கை முறையில் ஆரோக்கியமான பளபளப்பான நகம் வளரும்.
 
நகங்களை வெட்டும் முன் தேங்காய் எண்ணெயை அல்லது வீட்டில் இருக்கும் ஏதேனும்
ஒரு எண்ணெயை தடவி சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் அழகாக விரும்பும்
வடிவத்தில் வெட்டலாம்.  நகத்தை பற்களால் கடிக்கக் கூடாது. சில சமயங்களில் ரத்தம் வரும் நிலை ஏற்படும்.
 
கால் நகங்கள்
 
வேப்ப எண்ணெயை கால் விரல் நகங்களுக்கு இடையே தொடர்ந்து தடவி வந்தால் நகத்தில் ஏற்படும் சொத்தை குணமடையும். தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி ஒரு டப்பில் ஊற்றி சிறிது கல் உப்பு, மஞ்சள்,வேப்பிலை அல்லது வேப்ப எண்ணெய் கலந்து அதில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் கால் நகங்கள்  சுத்தமாகும். வெடிப்பு நீங்கும். கால் விரல்கள் புத்துணர்ச்சி பெறும். 
 
உங்கள் ஆரோக்கியத்தின் அடையாளமாக திகழும் நகங்களின் பாதுகாப்பில்
அக்கறையோடு கடலூர் தி சுசான்லி மருந்துவமனையில் சித்தா, ஆயுர்வேதிக்,ஹோமியோபதி, இயற்கை முறை சிகிச்சைகளை அளித்து வருகிறோம்.  நாங்கள் எப்போதும் ஆரோக்கியம் மற்றும் அழகின் பாதுகாவலர்கள். உங்கள் நகங்களைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்.சில பிரச்சனைகள் இருந்தால் அது உங்கள் உடல்நலத்தில்
ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சனைக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். 
 
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்.
11, பாரதிதாசன் தெரு,பிள்ளையார் கோயில் எதிரில், மஞ்சக்குப்பம், 
கடலூர்-607001
9367622256