
-டாக்டர்.ஆர்.கே.ஆனந்த்,குழந்தை நல மருத்துவர்
குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று தீர்மானிப்பது பெற்றவர்களுக்கு சுலபமானது அல்ல. இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, ஒரு சில குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்.
அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு உங்கள் குழந்தையை அனுப்புவதுதான் எப்போதுமே நல்லது.
சில பள்ளிகள் ஒரே வகுப்பில் ஏராளமான பிள்ளைகளைச் சேர்க்கும். இதனால், ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாகக் கவனிக்க இயலாது போகும். எனவே, ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம் எங்கே நல்ல முறையில் இருக்கிறதோ, அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுங்கள். குழைந்தைகள் ஓடி விளையாட அங்கே போதிய இடம் இருக்கிறதா, அல்லது அதற்கு வேறு ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

