
· காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறுவிட்டுக் குடிக்கலாம்.
· காலை உணவை தவிர்க்காமல் நேரத்துக்கு உண்ணவும்.
· காய் மற்றும் பழங்களில் இருந்து நார்ச்சத்தைப் பெறவும்.
· துவரம்பருப்பைத் தவிர்த்து பாசிப்பருப்பை உண்ணவும்.
· சாப்பாட்டின்போது இடையே அல்லது சாப்பாட்டுக்குப் பிறகு உடனே அதிகளவு நீர் அருந்தக் கூடாது.
· இடையே நீர் குடிப்பதால் செரிமான நொதிகள் நீர்த்துப் போய்விடும்.
· சாப்பாட்டுக்கு முன், ஒரு குவளை நீர் அருந்துதல் அவசியம்.
· உணவு உண்ட பிறகு, 40&60 நிமிடம் கழித்து நீர் அருந்தவும். இது செரிமானத்தை சீர்செய்யும்.
· முடிந்தால் வெதுவெதுப்பான நீர் பருகவும். இது உணவைச் சீராக செரித்து வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும்.
· காரம் அல்லது அசைவ உணவுகளை உண்ட பிறகு வெதுவெதுப்பான நீரை பருகுதல் நல்லது.
· உணவை நன்கு மென்று விழுங்கவும். இது செரிமானத்தை ஊக்குவிப்பதோடு வயிற்று அமிலச் சுரப்பையும் குறைக்கும்.
· அதிகளவு தேநீர் மற்றும் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
· துரித உணவு, எண்ணெய் உணவு வகைகள் மற்றும் கார உணவுகளைத் தவிர்க்கவும்.
· மன அழுத்தம், பரபரப்பு போன்றவை அமிலச் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
· அதனால் எளிய யோகா அல்லது நடத்தல் செய்து அன்றாடம் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளவும்.
உணவின் மூலம் அல்சரைத் தவிர்ப்பது எளிது. அதை கடைப்பிடிப்பது சிலருக்கு அரிது.

