சர்க்கரையாளர்களின் சத்ரு அரிசி என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையும் இருக்கிறது. அரிசி சாதத்தில் மட்டுமல்ல.. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள எந்த உணவை சாப்பிட்டாலும், சர்க்கரையாளர்களுக்கு சங்கடம்தான். ஆனால், அரிசி சாதம் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடவே செய்யும். நாம் என்ன அரிசி சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்தே அது உள்ளது.

கை குத்தல் அரிசியில் உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது. புற்றுநோயினை வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கல் வராமல் தடுகின்றது. உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

சிவப்பு காட்டு அரிசி  ரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.   சிவப்பு அரிசி  கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

குள்ளகார் அரிசி  ரத்தத்தை சுத்தமாக்கும். தோல் நோயை குணப்படுத்தும்.

கருப்பு கவுணி அரிசி சாப்பிட்டால்  புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி  சாப்பிட்டால் நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

 பூங்கார் அரிசி  சாதம் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

 காட்டுயானம் அரிசி  நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய்க்கு நிவாரணம் தரும்.  கருத்தக் கார் அரிசி  மூலம், மலச்சிக்கல் போன்றவற்றை குணமாக்கும்.

காலாநமக் அரிசி  மூளை, நரம்பு, ரத்தம், சிறுநீரகம் ஆகியவற்றை சீராக வைத்திருக்கும்.  

மூங்கில் அரிசி  மூட்டுவலி, முழங்கால் வலியைப் போக்கும்.

இலுப்பைப்பூசம்பா அரிசி  பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலியைப் போக்கும்.

தங்கச்சம்பா அரிசி  பல், இதயத்தை  வலுவாக்கும்.

கருங்குறுவை அரிசி  இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

கார் அரிசியால் தோல் நோய் சரியாகும்.  குடை வாழை அரிசி யால் குடல் சுத்தமாகும்.

கிச்சிலி சம்பா அரிசி யில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

நீலம் சம்பா அரிசி யால் ரத்த சோகை நீங்கும்.   சீரகச் சம்பா அரிசி  அழகு தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 பிசினி அரிசி  மாதவிடாய், இடுப்பு வலியை குணமாக்கும்.  வாலான் சம்பா அரிசி யால் சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.