டாக்டர்.கு.கணேசன். பொது நல மருத்துவர்

  1. அவரவர் வயது, உடல் எடை, உழைப்பு, வேலை போன்ற வற்றுக்கு ஏற்றபடி தங்களுக்குத் தேவையான உணவுக் கலோரிகள் எவ்வளவு என்பதையும் அதற்குரிய உணவுமுறை என்ன என்பதையும் ஓர் உணவியலாளர் உதவியுடன் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் தினசரி உணவுமுறையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
  2. தினமும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட்டாலும் நாளடைவில் அலுத்துவிடும்; மேலும், இந்த மாதிரியான உணவுமுறையால் சில வைட்டமின்கள் உடலுக்குக் கிடைக்காமலே போகலாம். இதனைத் தவிர்க்க ஒவ்வொரு உணவுக்கும் அதே கலோரிகள் தருகின்ற மாற்று உணவுபற்றியும் தெரிந்துகொண்டு, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  3. இன்றைய உணவுக் கலாச்சாரத்தில் செயற்கை உணவுகள் அதிகம் இடம் பெறுவதைக் காண்கிறோம். இந்த உணவுகளை நீண்ட காலம் பாதுகாப்பதற்காகப் பதனப் பொருள்கள் சிலவற்றைச் சேர்ப்பார்கள். இவற்றில் ‘சல்ஃபைட்’ (Sulphite) எனும் வேதிப்பொருள் உள்ளது. இது, அந்த உணவுகளில் உள்ள வைட்டமின் சத்தை அழித்துவிடும். ஆகவே, முடிந்தவரை செயற்கை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  4. வைட்டமின்கள் அதிக வெப்பத்தில் அழிந்துவிடும். எனவே, உணவைச் சமைக்கும்போது அதிக வெப்பம் ஆகாது. இதனால், ஏற்கனவே சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  5. உணவுகளை அதிக அளவு தண்ணீரில் கொதிக்க வைப்பதாலும், அதிக நேரம் கொதிக்க வைப்பதாலும் அவற்றில் உள்ள வைட்டமின்கள் கரைந்து விடும். ஆகவே, இந்தமாதிரியான சமையல் முறைகளைத் தவிர்க்க வேண்டும்.
  6. உணவுகளில் உள்ள சில வைட்டமின்கள் அதிக வெளிச்சத்தில் அழிந்துவிடும். ஆகவே, உணவுகளைச் சமைத்தபின் நன்றாக மூடிப் பாதுகாத்து, வெளிச்சம் குறைந்த இடங்களில் வைக்க வேண்டும். சூரிய ஒளி நேரடியாக உணவுப் பாத்திரங்களில் படாமல் பாதுகாக்க வேண்டும்.
  7. சமைத்த அன்றே உணவைச் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. பல நாட்களுக்குக் குளிர்சாதனப்பெட்டியில் உணவைப் பாதுகாத்துச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்குக் கேடு
  8. காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்களைக் குடிப்பதற்குப் பதிலாக பழச்சாறுகளைக் குடிப்பது நல்லது. மாலை நேரத்தில் நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதற்குப் பதிலாக, சுண்டல் போன்ற பயறு வகைகள், காய்கறி சாலட் அல்லது பழசாலட் சாப்பிடலாம்.
  9. புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும் எல்லா வைட்டமின்களுக்கும் எதிரி. இப்பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டியது அவசியம்.
  10. மதிய உணவில் அல்லது இரவு உணவில் ஒரு வகை சாதம், பருப்பு அல்லது சாம்பார்,இரண்டுவகைக் காய்கள், தயிர் அல்லது மோர் சேர்த்துக்கொண்டால் நமக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்துவிடும்.
  11. அளவுக்கு அதிகமானால் வைட்டமினும் விஷம்தான். பிட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளில் வைட்டமின் உள்பட எல்லாச் சத்துகளும் மிகையாகவே இருக்கும். இவை பல உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிகோலும். ஆகவே, மேற்கத்திய உணவுகளின் மேல் உள்ள மோகத்தை விட்டுவிட்டு இந்தியப் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  12. முழுத்தானியங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள், பச்சைக்காய்கறிகள், பழங்கள், கீரைகள், முட்டை, மீன் என்று இயற்கை உணவுகளை உட்கொண்டால் வைட்டமின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.
  13. அப்படியும் வைட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்றால், மருத்துவர் உதவியுடன் உங்களுக்குத் தேவையான சத்துணவுகளைத் தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள். சமயங்களில் நோய் விரைவில் குணமாக உணவுச்சத்துகள் அல்லது வைட்டமின்கள் அடங்கிய சத்துணவுப் பவுடர்களை (Fortified Vitamin Foods) மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். அவற்றையும் குறிப்பிட்ட காலத்துக்குச் சாப்பிடலாம்.
  14. இறுதியாக இந்தியாவில் ஆராய்ச்சி செய்யப்பட்டு, இயற்கை உணவில் தயாரிக்கப்பட்டு, உலகத்தரச் சான்றிதழ் பெற்றுள்ள ‘DXN ஸ்பிருலினா’ (DXN Spirulina) எனும் ஊட்டச்சத்து மாத்திரை மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதையும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.