பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டிய சில எளிய சிகிச்சை முறைகளைப் பற்றி சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்.

*கைப்பிடி அளவு வேப்பங்கொழுந்தை நீரில் கழுவி, விழுதாக அரைத்து, குளிக்கும் முன்பு தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு வாளி தண்ணீரில் இரண்டு எலுமிச்சை பழச்சாறைக் கலந்து, அந்த நீரில் குளித்தால் பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

*தலையில் அதிக எண்ணெய்ப் பசையுடன், பொடுகுத் தொல்லையும் இருந்தால் முடி உதிரலாம். இந்தப் பிரச்னைக்கு குளிக்கும் முன்பு தயிர் அல்லது மோரினை தலையில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊறிய பிறகு குளித்தால், எண்ணெய்ப்பசை நீங்கும். முடியும் வலுவாகிப் பளபளப்பு கூடும்.

*மஞ்சள்தூளை, தண்ணீரில் கலந்தோ அல்லது, ஷாம்பூவுடன் கலந்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம்.

*அருகம்புல் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து மணல் போன்று வருமாறு நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை குளிரவைத்து, இரண்டு நாட்களுக்கு வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து தலைக்குப் பயன்படுத்தலாம்.