1.கண்ணாடியை சாதாரண துணியில் கண்டிப்பாக துடைக்கக்கூடாது.

காற்றில் பறக்கும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள் மூலம்தான் பெரும்பாலும் கண்ணாடிகளில் கீறல் விழும்.கண்ணாடியைத் துடைக்க ‘லின்ட்- 3 மைக்ரோ ஃபைபர் (lint-3 micro fibre)’ துணியைத்தான் பயன்படுத்த வேண்டும்.கையாலோ, அணிந்திருக்கும் உடைகளாலோ துடைக்கக் கூடாது.கண்ணாடி வாங்கும்போதே இந்தத் துணியையும் கொடுப்பார்கள்.அந்தத் துணிஒரு சில மாதங்களில் அழுக்காகிவிடும்.அதனால் ஒன்றிரண்டு துணிகளை கூடுதலாக வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

2.லென்ஸை சுத்தப்படுத்த அதற்கான ஸ்பிரே மட்டுமே பயன்படுத்த வேண்டும்‌.

3.கண்ணாடியில் இருக்கும் நோஸ் பேட், நாளாக ஆக கடினமாகி,மூக்கில் அழுத்தம் ஏற்படுத்தும் என்பதால், மூன்று மாத இடைவெளியில் அதை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

4.கண்ணாடியை பாக்கெட்டுக்குள் வைப்பது,சட்டையில் தொங்க விடுவது எல்லாம் கூடாது.அதை மேசையின் மீது வைக்கும்போது ஃபிரேம் கீழாகவும்,லென்ஸ் மேலாகவும் இருக்க வேண்டும்.

5.ஒவ்வொரு லென்ஸுக்கும் ஃபிரேம் மாறும்.அதை சரியாகத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.ஃபிரேம் பற்றிய ஆலோசனையையும் டாக்டரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

6.கணினியில்(Computer) அதிகமாக வேலை செய்பவர்கள்’கிளார் கோட்டிங்’ (Glare coating)லென்ஸ் பயன்படுத்தலாம். இண்டோர்,அவுட்டோரில் வேலை செய்பவர்களும்,இரவு டிரைவிங் மேற்கொள்கிறவர்களும் ‘போட்டோ க்ரோமிக்’ (photo chromic) லென்ஸ் பயன்படுத்தலாம்.
-முகுந்தன்.