
டாக்டர் உஷா ரவி, BNYS,Ph.D(Acu)
டாக்டர் ஆர்.பானுபிரியா,BAMS,MD(Acu),MBA(HM)
முகம் தான் மனிதனுக்கு அடையாளம்.அந்த முகத்திற்கே பாதிப்பு என்றால் என்ன செய்வது? உடலில் எத்தனையோ விதமான நோய் பாதிப்புகள் வருகின்றன.
அவற்றில் முகத்தில் வரக்கூடிய முகவாதம் ஒருவிதமான மன நெருக்கடியை
உருவாக்கலாம்.
முகவாதம் என்பது முகத்தில் உள்ள நரம்புகளின் பாதிப்பால் ஏற்படும் நோயாகும்.இதில் முகத்தின் ஒரு பக்கத்தின் தசைகள் திடீரென பலவீனமடைந்து செயலிழக்கலாம்.
முகவாதம் (Bell’s palsy) என்பது பொதுவாக முகத்தின் ஒரு பக்கம் செயலிழப்பு அல்லது தசைகளின் இயக்கத்திலான செயலிழப்பு ஆகும். மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்துவதை சிரமப்படுத்தும் நிலை.

-டாக்டர் ஆர்.பானுபிரியா ,BAMS,MD(Acu),MBA(HM)
அறிகுறிகள்:
முகத்தின் ஒரு பக்கத்தில் தசைகள் இயங்காமல் போவது; உதடுகள்,கண்கள், நெற்றி மற்றும் கன்னங்களில் வலி, உணர்வின்மை. கண்களை மூட முடியாமல் போவது, வாய் சாய்ந்து போவது,பேசுவதில், சாப்பிடுவதில், சிரிப்பதில் சிரமம். தலை மற்றும் கழுத்து தசையில் விறைப்பு மற்றும் வலி.முக நரம்பில் ஏற்படும் காயம், தண்டுவடத்தில் பாதிப்பு.கடுமையான குளிர் பாதிப்புகளால் ஏற்படலாம்.குளிர் அல்லாத பிற காரணங்களால் கூட திடீரென நேரிடலாம்.
சிகிச்சை மற்றும் பராமரிப்பு
கடுமையான குளிர் காற்றை தவிர்க்க வேண்டும்.சிகிச்சையாக
முகத்துக்கு எண்ணெய் தேய்ப்பது,மருந்து எடுத்துக்கொள்வது போன்ற இயற்கை முறைகள் பின்பற்றப்படுகின்றன.முக நரம்புகளை வலுப்படுத்த, தசைகளை மீண்டும் இயக்கும் பயிற்சிகள் உள்ளன.வாயில் பலூனை ஊதுதல், தீவிர உயிரெழுத்து உச்சரிப்பு போன்ற பயிற்சிகளை செய்யலாம். ஆயுர்வேதம், பஞ்சகர்மா உள்ளிட்ட சிகிச்சைகளும் உள்ளன.
உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்தது மட்டுமல்ல,இந்திய அரசும் ஏற்றுக்கொண்ட அக்குபஞ்சர் சிகிச்சை முறை முகவாதத்திற்கு மிகச்சிறந்த தீர்வினை வழங்குகின்றது!. தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப பாரம்பரிய ஆயுர்வேத சாஸ்திரிய மருந்துகளும் வழங்கப்படும்.
முக நரம்பு மீது குளிர் காற்று நேரடி தாக்கம் ஏற்படுதல்;குளிர்ந்த சூழல்,அதிக பனி வாயிலாக முகநரம்பு பாதிக்கப்படலாம். காதில் குளிர்சாதன காற்று அல்லது குளிர் கால காற்று புகுவதால்,முகநரம்பு செல்லும் சிறிய துவாரம் அழுத்தப்படுவதும் முகவாதத்திற்கு வழிவகுக்கிறது. அதிக மன அழுத்தம், உடல் ரீதியான வாத மாற்றங்கள்,உடல் நரம்பு பாதிப்புகள் போன்றவை முகவாதத்தை ஏற்படுத்தும்.தவிர்க்க இயலாத பின்விளைவுகள் மற்றும் சில வியாதிகளால் முகநரம்புகளுக்கு சேதம் ஏற்படலாம்.
தடுப்பு வழிமுறைகள்:
குளிர் காலத்தில் அதிகாலை,இரவு நேர நடைப்பயிற்சி, இருசக்கர வாகன பயணம் மற்றும் ஏசி அறைகளில் நீண்ட நேரம் இருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முகத்தை பனிக்காற்று பாதிக்காமல் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஸ்கார்ப்,ஹெல்மெட், காதில் பஞ்சை வைத்தல் முக்கியம்.மன அழுத்தம் தவிர்க்கவும்.
உலகில் 80சதவீத மக்கள் ஏதாவது ஒரு மனப்பிரச்னையுடன் தான் தங்களது வாழ்வை நகர்த்திக் கொண்டுள்ளார்கள். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முகவாதத்தை சீர் செய்வதற்கான நாட்கள் அதிகரிக்கும்.
முகவாதத்திற்கு அக்குபஞ்சர் மாக்ஸா சிகிச்சை மற்றும் அரோமாதெரபி சிகிச்சை மிகவும் நல்ல பலனை அளிக்கும். அக்குபஞ்சர் சிகிச்சையில் முக நரம்புகளுக்கு வலு தரக்கூடிய அருமையான அக்குபஞ்சர் புள்ளிகள் கை கால்களில் உள்ளன. மேலும் தலை அக்குபஞ்சர் என்னும் முறையில் சீரான சிகிச்சையும் உண்டு. முகவாதத்தில் ஏற்படக்கூடிய தசை செயலிழப்பை சரி செய்ய முக்கிய தசைகளை தூண்டக்கூடிய அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளன. இவற்றுடன் ஆயுர்வேத மருந்துகளும் நல்ல தீர்வை வழங்கும். சரியானபடி சிகிச்சை மேற்கொண்டால் படிப்படியாக
முகத்தில் உள்ள தசைகள் இயல்பாக இயங்க ஆரம்பிக்கும்.
முகவாதத்தைக் ஏற்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்த்து,எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
சிகிச்சை முறைகளாக தலைக்கு எண்ணெய் தேய்ப்பது,மூக்கு, காதில் மருந்து விடுதல் போன்றவை உடனடி தாக்கத்தை குறைக்கும்.முகம் மற்றும் முகநரம்புகளை இயங்க வைக்கும் பயிற்சிகளை செய்து, பிசியோதெரபி பற்றிய ஆலோசனை பெறுதல் அவசியம். இந்த முறைகளை பின்பற்றுவதால் முகவாதம் ஏற்படாமல் தடுப்பதில் உதவும்.
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்,
எண்:11,பாரதிதாசன் தெரு ,
பிள்ளையார் கோயில் எதிரில் ,
மஞ்சக்குப்பம்,
கடலூர்-607 001.
செல்: 93676 22256.
– ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)

