-பி.சிவப்பிரியா வரலட்சுமி,
உளவியலாளர்.

ண்மையான ஆசிரியர்கள் புத்தகத்திலிருந்து பாடம் நடத்துவதில்லை. தங்கள் இதயத்தில் இருந்து தான் நடத்துகிறார்கள்…

குழந்தைப் பருவ மூளை வளர்ச்சி என்பது மிகவும் சிக்கலானது. ஹார்மோன் சுரத்தலும்,உடலின் அதீத வேதி சமனற்ற சூழலும் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன. அதனை பாதுகாப்பாக கடக்கவே பள்ளிகள் தேவை;அதைவிட நல்ல ஆசிரியர்கள் தேவை.

இன்றைய தேதியில் நமக்குத் தேவை வன்முறை இல்லாத வகுப்பறை… மகிழ்ச்சியாக படிக்கும் குழந்தைகள்.நிர்ப்பந்தம் இல்லாத, தானாக,ஆர்வமுடன் விரும்பிப் படிக்கும் பள்ளியறை.

சில வருடங்களாக என் சொந்த விருப்பில் சில பள்ளிகளுக்கு உளவியல் மற்றும் உணர்ச்சி நிலை தன்மை குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் எடுத்து வருகிறேன்.மாணவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கி வருகிறேன்.

மாணவர்களுடன் உரையாட நேரிடும் போது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் உண்மை ஒன்று தெரியவந்தது.

அதாவது மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் கூட போதைப் பொருளுக்கு அடிமையானது தெரியவந்தது. இதுகுறித்து மாணவர்களிடம் மனம் விட்டு பேசும் போது… போதைப்பொருள் குறித்த எந்த ஒரு விழிப்புணர்வும் பள்ளிகளில் இல்லை.

இதைத் தவிர்த்து மேலும் பல உளவியல் சார்ந்த சிக்கல்கள் மாணவர்களின் மனதை சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கின்றன.

1.தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வாங்குவது குறித்த பதட்டம்.

2.அவ்வப்போதும் தற்கொலை எண்ணம் தோன்றுவது.

3.பாலியல் குறித்த விழிப்புணர்வின்மை.

4.உணர்ச்சிகளுக்குள் மூழ்கி சிக்கித் தவிப்பது.

பள்ளிகளின் மனநலம் குறித்த விழிப்புணர்வு அத்தியாவசியமா ? இல்லையா:

மாறிவரும் சமுதாய சூழலுக்கு ஏற்ப மாணவர்களின் மனம் பல கவனச் சிதறல்களால் திசை மாறி அலைகின்றது, இதனால் சிறு வயதிலேயே மனசோர்வு,பதட்டம் போன்றவை அவர்களை நன்றாக படிக்க விடாமல் தடுக்கின்றன.

இத்தகை மனநல சிக்கல்களை சிறுவயதிலேயே கண்டறிந்து தடுக்க முடியும்.

உளவியல் நிபுணர்கள் பள்ளிக்கூட மாணவர்களுக்கு உதவ முடியும்.பல இடங்களில் உதவி வருகிறார்கள்.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் மனம் விட்டு பேசத் தயங்குகிறார்கள். மனநல நிபுணர்கள் பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப தானும் பேசுவதால் பிள்ளைகள் சக மாணவர்களிடம் பேசுவது போன்று உணர்கிறார்கள்.
இதனால் பல மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கின்றது.

மனநலம்… அதுவே குழந்தைகளின் எதிர்காலம்!

மனநலம் பள்ளி மாணவர்களிடையே பல நன்மைகளை சேர்க்கின்றது…

1.வலுவான உறவுகளை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

2.சுமூகமான நட்பு பாராட்டுதலுக்கு வழிகாட்டும்.

3.கல்வியில் சிறந்து விளங்க பாதை அமைத்து தருகிறது.

4.சமுதாய எதிர்பார்ப்புகளை சரியாக கையாள கற்றுத் தருகிறது.

5.பள்ளிப் பருவத்தின் இனிமையை முழுமையாக அனுபவிக்க ஊக்குவிக்கும்.

6.சக மாணவர்களின் மிரட்டல்கள், வன்முறைகளை சரியாக கையாள பயிற்சி தருகிறது.

7.தேர்வுக்கு முன் மன அமைதி அடையும் வழிகளை கற்றுக் கொள்ள பயிற்சி தரப்படுகிறது.

8.உணர்ச்சி, நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு பணிகள் நடைபெறுகிறது.

9.சுய ஒழுக்கம் குறித்த வழிமுறைகள்… வாழ்வியல் கல்வியாக பயிற்றுவிக்கப்படுகிறது.

இத்தகைய மனநலம் குறித்த விழிப்புணர்வுகள் மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்யும் கருவிகளாக அமைகிறது. பெருகிவரும் போதைப் பொருள் அடிமைக்கு நம் செல்வங்களை காப்பாற்ற இதுவே வழியாகும்.போதைப் பொருளை விடு… புத்தகத்தை எடு! என்பதே எங்களின் தாரக மந்திரம் ஆகும். மேலும் மனநலம் ஒரு பொது சொத்தாக மாற நாம் அனைவரும் சேர்ந்து நம் இளைய தலைமுறையினரை மனநலத்தோடு வாழ வழி செய்வோம்!

ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)