பொதுவாகவே, மழலைப்பருவத் தினருக்கு கதைகள் கேட்பது மிகவும் பிடிக்கும். 30, 40 வருடங்களுக்கு முன்னால் இப்போது உள்ளது போல நிறைய டி.வி.சேனல்களோ சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களோ எதுவும் கிடையாது.

அப்போது இருந்த ஒரே பொழுது போக்கு சாதனம் கதைதான்.வீட்டில் இருந்த பெரியவர்களும் அதற்கேற்ற வகையில் கதைகள் சொல்வார்கள். பல சமயங்களில் கடவுள், விலங்குகள், கோமாளி, அரக்கர்கள் மாதிரி நடித்தும்,விதவிதமான ஓசைகள் எழுப்பியும் குழந் தைகளை மகிழ்ச்சி அடைய செய்தனர்.அதன் தொடர்ச்சியாகவே, இன்றைய கார்ட்டூன் சேனல்கள் இருக்கின்றன.

இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கண்கவர் வண்ணங்கள், சுட்டி எலி, முட்டாள் பூனை, பிரம்மாண்ட யானை, தங்கள் மனதுக்குப் பிடித்த ஹீரோக்கள் சூப்பர் மேன், பேட்மேன் என சுவா ரஸ்யமாகவும், விதவிதமாகவும் உலா வருவதால் குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை விரும்புவதும்,அவற்றைப் பார்த்து சந்தோஷமாக இருப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கும் நேரத்தை கண்காணித்து ஒழுங்குபடுத்துவது அவசியம்.நேர வரையறை செய்து குழந்தைகளை நல்வழிப் படுத்தல் முக்கியம்.

கார்ட்டூன் சேனல்களால் என்ன பயன்?

கார்ட்டூன்கள் நிச்சயமாக குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.பொழுது போக்கு என்பதையும் தாண்டி உளவியல் ரீதியான நன்மை தீமைகள் உண்டு.

நேர்மறையான சூப்பர் மேன் கதாபாத் திரங்களைப் பார்க்கும்போது பிறருக்கு உதவ வேண்டும், ஆபத்தில் உள்ளவரைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும், சாகசங்கள் நிகழ்த்த முற்பட வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் தோன்றும்.

சூன்யக்காரி, மந்திரவாதி போன்ற எதிர்மறை கதாபாத்திரங்களால் பாதிக்கப்பட்டால் மற்றவர்களைத் துன்பு றுத்தவும் செய்வார்கள். அதனால்தான் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன்கள் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.கார்ட்டூன்களில் நடப்பவையெல்லாம் நிஜமல்ல; நிஜ வாழ்க்கை வேறு. அவற்றில் இருந்து நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்குப் புரியவைத்தால் கார்ட் டூனால் குழந்தைகளுக்கு உண்டாகும் மகிழ்ச்சி ஆரோக்கியமாகவும் மாறும்!

-டாக்டர் ஜி.ராஜமோகன்.