
சென்னை, மணப்பாக்கத்தில் ஜனவரி 2026, 9-12ஆம் தேதி வரை தேசிய ஆரோக்கிய கண்காட்சி மற்றும் ஆயுஷ் மாநாடு நடைபெற உள்ளது. ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் ஹார்ட் ஃபுல்னஸ் மருத்துவ மையம்,டாக்டர் ஸ்ரீ வர்மா வெல்நஸ் மருத்துவமையமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள்.
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவை உலகளாவிய மேடைக்கு எடுத்துச் செல்லும் ஒரு தேசிய ஆரோக்கிய இயக்கமாக இந்த நிகழ்ச்சி அமைய இருப்பதாக நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
டாக்டர் ஸ்ரீ வர்மா கூறியதாவது…
“மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றங்கள்,மன அழுத்தம்,புதிய உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இவற்றில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்து மாற்று மருத்துவ நிபுணர்கள் மக்களுக்கு நேரிடையாக விளக்க இருக்கிறார்கள். கண்காட்சி நாட்களில் பொதுமக்கள் மாற்று மருத்துவர்களை நேரில் சந்தித்து தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். கட்டணம் எதுவும் இல்லை.
யோகா,தியான பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் கற்றுத் தர இருக்கிறோம்.
200க்கும் மேற்பட்ட இயற்கை மூலிகைகள் கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மூலிகைகளை, அவற்றின் பயன்பாடுகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆயுர்வேதம்,சித்தா, யோகா,யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகள் இன்றைய உலகின் சுகாதார சவால்களுக்கு முழுமையான, நிலையான தீர்வுகளை வழங்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
மாநாட்டில் மாற்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட இருக்கிறார்கள். மருத்துவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சி நாட்களில் மாற்று மருத்துவர்கள் மக்களுக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்க இருக்கிறார்கள்.
இந்த கண்காட்சி மற்றும் மாநாட்டின் மூலம் நமது பாரம்பரிய மருத்துவத்தில் ஆற்றலை சாதனைகளை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல இருக்கிறோம். பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் டாக்டர் ஸ்ரீ வர்மா.
தகவல் தொடர்புக்கு:
9500946642,
9994211666,
9994244111.
-பவித்ரன்.
ஹெல்த் அண்ட் பியூட்டி.

