
மக்களுக்கு தரமான, மலிவான விலையில் மருந்துகளை தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பு.
உலக அளவில் புகழ்பெற்ற பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன்,சித்தா,யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
2009 ஆம் ஆண்டு,தி சுசான்லி குழுமத்தின் நிறுவனரும் சேர்மனுமான சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி அவர்களின் சீரிய முயற்சியில் தொடங்கப்பட்டது தான்(சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தியாளர்கள் சங்கம்) ஆயுஷ் மருந்து தயாரிப்பாளர் அமைப்பு. முறையாக பதிவு செய்யப் பெற்று கடந்த 16 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வருகிறது.ஆயுஷ் மருந்துகளை தயாரிக்கும் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த அமைப்பானது பாண்டிச்சேரி முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், மருந்துகள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் வழங்கும் அதிகாரி, மற்றும் ஆயுஷ் அமைப்பின் பாண்டிச்சேரி இயக்குனர் மற்றும் முன்னாள் இயக்குனர்கள், அதிகாரிகள், இவர்களின் முழுமையான ஒத்துழைப்பு சீரிய வழிகாட்டுதலுடன் ஆயுஷ் மருந்துகளை மருந்து உற்பத்தியாளர்கள் மிகத் தரமானதாகவும், பாரம்பரியம் மாறாமலும் அறிவியல் ஆய்வின் துணையுடன் தயாரிக்கின்றார்கள்.ஆயுஷ் மருந்துகளை உலகத் தரத்தில் தர நிர்ணயம் செய்யவும், உலக அரங்கிற்கு இந்தியாவின் தரமான ஆயுஷ் மருந்துகளை கொண்டு சேர்க்கவும் கடந்த 15 ஆண்டுகளாக முயற்சித்து அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளது இந்த அமைப்பு.
மேலும் ஆய்வுகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் 16.12.2025 அன்று
புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலக அளவில் நமது ஆயுஷ் மருந்துகளை முறைப்படியான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மக்களுக்கு தரமான மருந்துகளை வழங்க முடியும்.பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து தயாரிப்புகளை உலக தரத்திற்கு வழங்க முடியும். அதற்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் உதவும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த முயற்சியில் உதவி செய்து, ஒத்துழைப்பு தந்த துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு,பேராசிரியர் ராஜேஷ் பூட்டானி, பேராசிரியர் டி.எஸ். சாரதா,டாக்டர் வி. தில்லை சேகர், பேராசிரியர் மகேஸ்வரன் மணி, டாக்டர் ஏ. ராஜேஷ்குமார்,திரு.ராம்ஜி ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் டாக்டர் சி. ஏ.ரவி.
-டாக்டர் ஜி ராஜமோகன்.

