* உலகில் எத்தனையோ உணவுகள் இருந்தாலும் முட்டைக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கிறது.
* காய்கறிகள்,பழங்கள், தானியங்கள், இறைச்சிகள் என எதுவாயினும் அவை முழுமையான உணவு இல்லை. ஆனால், முட்டை என்பது முழுமையான பலவிதமான சத்துக்கள் நிறைந்த உணவு.
* முட்டையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு இதயத்தின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

* பல உணவுகளில் புரதம் இருக்கிறது. ஆனால் முட்டையில் இருக்கும் புரதத்திற்கு ஒரு தனித்தன்மை உண்டு.
* நம் உடலில் உள்ள எல்லா புரதங்களும் அமினோ அமிலம் என்னும் மூலக்கூறுகளாக பிரிந்தே சத்துகளாக, என்சைம்களாக மாறுகின்றன. அமினோ அமிலங்களில் 20 வகை உண்டு. அவற்றில் ஒன்பது அமினோ அமிலங்கள் அத்தியாவசியமானவை. இந்த 9 அமினோ அமிலங்களும் சரிவிகிதத்தில் நிறைந்திருக்கும் உணவே நல்லுணவு. அதிலும் அந்த உணவு எளிதில் ஜீரணமாகி அமினோ அமிலங்களாக மாறி உடலில் சேர வேண்டும் .இதை கணக்கிடும் அளவு தான் பயலாஜிக்கள் வேல்யூ .முட்டையின் பயாலஜிக்கல் வேல்யூ 95%.
* நீங்கள் மிகவும் சத்தான உணவு என்று எண்ணிக் கொண்டிருக்கும் எந்த உணவை அளவிட்டாலும் 60 முதல் 70% தான் பயலாஜிக்கல் வேல்யூ இருக்கும்.
* முட்டையை சமைக்காமல் பச்சையாக குடிப்பது நல்லதல்ல.
* முட்டைகளை சாதாரண வெப்ப நிலையிலேயே வீட்டில் சேமித்து வைக்கலாம். பிரிட்ஜில் வைத்தாலும் தவறில்லை.

ப்ரிட்ஜில் வைக்கப்படும் முட்டைகளை சமைக்கும் முன் கொஞ்ச நேரம் வெளியில் வைத்து விட்டு பயன்படுத்த வேண்டும்.
* குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு தாராளமாக இரண்டு முட்டைகள் கொடுக்கலாம்.
* பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டைகள் எடுத்துக் கொள்ளலாம்.
* உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் சாதாரணமாக மூன்று முதல் நான்கு முட்டைகள் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
* சர்க்கரை, இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு வந்தவர்கள் மஞ்சள் கருவுடன் சேர்த்து தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.
* கர்ப்பிணிகளும் தாராளமாக தினமும் மஞ்சள் கருவுடன் இரண்டு முட்டைகள் எடுத்துக் கொள்ளலாம்
* எந்த முட்டை நல்லது? நாட்டுக்கோழி முட்டையா?காடை, வாத்து மூட்டை சாப்பிடலாமா? பிராய்லர் கோழி முட்டைகள் தான் பரவலாக கிடைக்கின்றன.
* எந்த முட்டையையும் தாராளமாக சாப்பிடலாம். பெரிய வித்தியாசங்கள் இல்லை.
* நாட்டுக்கோழி முட்டை தான் இருப்பதிலேயே உயர்ந்தது என்று சொல்லலாம்.
* இயற்கையாக பூமியில் இறங்கி, புழு பூச்சிகளைத் தின்று வாழும் நாட்டுக்கோழி முட்டையில் ஒமேகா-3 எனப்படும் இதயத்திற்கு அவசியமான ஒரு ஃபேட்டி ஆசிட், பண்ணைக் கோழி முட்டை விட அதிகமாக இருக்கிறது.
* முட்டையை சத்து குறையாமல் சமைப்பது முக்கியம்.
* எண்ணெயில் பொரிப்பதை விட மிதமான சூட்டில் வேக வைத்துச் சாப்பிடுவதே நல்லது.
* ஆம்லெட் ,ஆஃப்பாயில் அல்லது மிதமான சூட்டில் பொரியல் செய்து சாப்பிடுவது முட்டையில் 70 சதவீத சத்துகள் கிடைக்க வழி செய்யும்.
* முட்டையை அச்சத்தோடு பார்க்காமல் மலிவான சத்து நிறைந்த உணவாக பாருங்கள்.
* முட்டையை அடிக்கடி சுவைத்து சாப்பிடுங்கள். சத்து குறைபாடு இல்லாத, அழகான, ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் உண்டு.