ண்மைக் குறைவு என்பது தனியொரு நோயல்ல.பல நோய் களின் பக்கவிளைவாகத் தோன்றுகிற அல்லது நோய்களின் அறிகுறிகளுள் ஒன்றாகத் தோன்றுகிற ஒரு குறைபாடு. இதை, அவற்றின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.

திருமணமானது முதற்கொண்டே தனக்கு ஆண்மைக் குறைவு இருக்கலாம் என்ற பயம் உள்ளவர்கள் இருக்கத்தான் செய் கிறார்கள். ஆனாலும் நாற்பது வயதைக் கடந்த நிலையில் இருப்பவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகமாக வெளியில் தெரிகிறது.

பயம் போன்ற மன ரீதியான காரணங்களைத் தவிர, சடங்கு சம்பிரதாயம் போன்றவற்றில் ஊறிப்போனவர்களை மனைவியராக உடையவர்கள், அத்தகையக் கொள்கையில் நாட்டம் உள்ளவர்களுக்கு ஆண்மைக் குறைவு என்பது சாதாரணமான ஒன்று.

காதல் திருமணம் செய்துகொண்டவர்கள், காலப்போக்கில் அந்த ஈர்ப்பு இல்லாமல் ஆண்மைக் குறைவினால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

வேலை,பணம்,தொழில் என்று அலைபவர்களிடமும், கணவன்- மனைவி இருவரும் வேலைக்குப் போகும் நிலையிலிருக்கும் போதும் அங்கே ஆண்மைக் குறைபாடு தலைகாட்ட ஆரம்பிக்கிறது.

மனைவிக்கோ கணவனுக்கோ காதலுணர்வு அல்லது பாலுணர்வு தோன்றாத சூழல் அமையும்போது, உடலுறவு கொள்ள நேரிட நேர்ந்தால் ஆண்மைக் குறைவு வந்துவிடுகிறது.

மனைவி உடலளவில் சுத்தமாக இல்லை. வியர்வை நாற்றமும், பொடுகு நாற்றமும், வாய் துர்நாற்றமும் வருகிறது. ப்ரெஷ்ஷாக இருப்பதில்லை என்று நினைக்கும் போதும் ஆணுக்கும், இதே எண்ணம் பெண்ணுக்கும் தோன்றி உடலுறவு மறுக்கப்படும் நிலையில் ஆண்மைக் குறைவு வந்துவிடுகிறது.

மனைவி மரக்கட்டையாகப் படுத்துக்கிடக்கும்போதும், தொடும்போதெல்லாம் கையைத் தூக்கி வீசியெறியும் போதும் ஆண்மைக் குறைவுதான் அவனை அணைத்துக் கொள்கிறது.

கணவன்-மனைவியரில் ஒருவர் எஜமானரைப் போலவும், இன்னொருவர் வேலைக்காரரைப் போலவும் இருந்தால்… காலப்போக்கில் விரக்தி ஏற்பட்டும்.கண்டிப்பாக விறைப்புத்தன்மை இருக்காது.

சோகமான சம்பவங்கள், தோல்விகள், பயம் தரும் சூழல்கள், நெருங்கியவரின் இழப்பு அல்லது கைப்பொருள் இழப்பு, எப்போதும் டென்ஷனான நிலையில் இருப்பவர்களுக்கு விறைப்புத்தன்மை வருவதில்லை.

மதுவுடனும், கையில் சிகரெட், பீடியுடனும் வாசம் செய்யும் ஆண்கள் நாளடைவில் உடலுறவு என்ற பந்தத்தை கோட்டை விடுகிறார்கள்.

இப்படி நிறைய காரணங்களை ஆண்மைக் குறைவுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். எனவேதான்,ஆண்மைக் குறைவை நோயென்று கூறாமல் குறைபாடு என்று சொல்கிறார்கள். குறைகளை நிறைவாக்கும் நிறைய வழிகள் இப்போது நம்மிடம் உள்ளன.

உளவியல் துறையும், மருத்துவத் துறையும் வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய பிரச்னையே இல்லை என்றாகியிருக்கிறது.

ஆண்மைக் குறைவுக்கு அற்புதமான மருந்து மாத்திரைகள் இருக்கின்றன.நவீன சிகிச்சை முறைகளும் உள்ளன.

ஆண்கள் கவலைப்பட தேவையில்லை.பெண்கள் ஆண்களை கேலி கிண்டல் செய்யாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருக்க மருத்துவ உலகம் உதவியாக இருக்கும்.