
அதிகாலை விழிக்கும்போதுதான் மனம் இலகுவாக இருக்கும்.உடலில் உற்சாகமும் வீரியமும் மிகுந்திருக்கும். அதுவே உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் என்கிறது சித்த மருத்துவம்.ஆனால், பயிற்சிகளையும் படிப்படியாகவே செய்ய வேண்டும். அதாவது, வாகனத்தை இயக்கும்போது எப்படி முதல் கியர், இரண்டாவது கியர் என்று படிப்படியாக வேகத்தை அதிகரிக்கிறோமோ அதேபோல உடற்பயிற்சியையும் சீராக அதிகரிக்க வேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில் வார்ம் அப் என்பார்கள். அதன் பிறகு உடலை வலுவாக்கும் தேகப் பயிற்சிகளைச் செய்யலாம்.
உணவு உண்டவுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.அப்போது உடல் செரிமானத்துக்கு தயாராவதால்,ரத்த ஓட்டம் முழுவதும் வயிற்றை நோக்கி அதிகமாக இருக்கும். அத்துடன் உணவு உண்டதும்,உடல் களைப்புறும். அதனால் சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.கடும் பசியினால் உடல் சோர்வுற்றிருக்கும்போதும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.பகலில் வேலை செய்து
களைப்பும் மனச்சோர்வும் இருக்கும்போது உடற்பயிற்சி செய்யக்கூடாது.தனி அறைகளில் உடற்பயிற்சி செய்யவதை தவிர்க்கலாம். காற்றோட்டமான அறைகள் அல்லது திறந்த வெளிகளில் உடற்பயிற்சி செய்வது நல்லது

